14 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவத்தில், மண்ணச்சநல்லூர் தொகுதி எடப்பாடி பழனிசாமி அணியின் எம்.எல்.ஏ., பரமேஸ்வரி உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டு - காவல்நிலையத்தில் புகார் அளித்தும், நடவடிக்‍கை எடுக்‍கக்‍கூடாது என, காவல்துறையினரை பெண் எம்.எல்.ஏ., மிரட்டியதாக பரபரப்பு புகார்

Jun 22 2018 2:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி மாவட்டத்தில் 14 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவத்தில், மண்ணச்சநல்லூர் தொகுதி எடப்பாடி பழனிசாமி அணியின் பெண் எம்.எல்.ஏ., பரமேஸ்வரி உடந்தையாக இருந்ததாக புகார் எழுந்துள்ளது. கடத்தப்பட்ட மைனர் பெண்ணின் குடும்பத்தினர், காவல்நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் இதுதொடர்பாக நடவடிக்‍கை எடுக்‍கக்‍கூடாது என, காவல்துறையினரை பெண் எம்.எல்.ஏ., மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடத்தப்பட்ட மைனர் பெண்ணின் பெற்றோரும், உறவினர்களும் பெண் எம்.எல்.ஏ.,வை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, அந்தச் சிறுமி பெற்றோரிடம் ஒப்படைக்‍கப்பட்டார்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே இனாம்கல்பாளைய​த்தைச் சேர்ந்த பத்மநாபன் என்பவரின் 14 வயது மகள், 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்ற இளைஞர், கடந்த சில தினங்களுக்‍கு முன்பு அந்த மாணவியை மிரட்டி, கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மண்ணச்சநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், எவ்வித நடவடிக்‍கையும் எடுக்‍கப்படவில்லை. இந்நிலையில், மாணவியை கடத்திச் சென்ற ராஜசேகரின் தந்தை சுப்பிரமணி, அந்த மாணவியின் வீட்டிற்குச் சென்று, குடும்பத்தினர் அனைவரையும் தகாத வார்த்தைகளால் பேசி, மாணவி கடத்தப்பட்ட சம்பவத்தை பெரிதுபடுத்தினால், அவர்களை அரிவாளால் வெட்டிக்‍ கொல்லப்போவதாக மிரட்டியுள்ளார். மேலும், மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ., பரமேஸ்வரி தங்களுக்‍கு ஆதரவு தருவதால், தங்களை போலீசாரும், வேறு யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது என ஆணவத்தோடு பேசி, ரகளையில் ஈடுபட்டு அச்சுறுத்தியுள்ளார். இப்பிரச்னையில் நடவடிக்‍கை எதுவும் எடுக்‍கக்கூடாது என காவல்துறையினருக்‍கு பெண் எம்.எல்.ஏ., மிரட்டல் விடுத்ததாகவும், மாணவியின் உறவினர்களுக்‍கு தகவல் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து, கடத்தப்பட்ட மைனர் பெண்ணின் குடும்பத்தினரும், உறவினர்களும் எம்.எல்.ஏ., பரமேஸ்வரியை நேரில் சந்தித்து கேட்டபோது, கடத்தல் சம்பவம் குறித்து தனக்‍கு எதுவும் தெரியாது என்றும், மண்ணச்சநல்லூர் தொகுதியில் இனாம்கல்பாளையம் என்ற இடம் எங்கு இருக்‍கிறது என்பதே தனக்‍கு தெரியாது என்றும் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார். இதனால், கொதிப்படைந்த சிறுமியின் உறவினர்கள், கடத்தல் சம்பவத்திற்கு எம்.எல்.ஏ., உடந்தையாக இருந்தது காவல்துறை மூலம் தங்களுக்‍கு தெரியவந்ததாகவும், மாணவியை உடனடியாக தங்களிடம் ஒப்படைக்‍கவேண்டும் என்றும் நிர்ப்பந்தம் செய்து, பெண் எம்.எல்.ஏ.,வுடன் கடும் வாக்‍குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்‍குவாதம் முற்றிய நிலையில், கடத்தப்பட்ட சிறுமி ஒரு மணிநேரத்தில் பெற்றோரிடம் ஒப்படைக்‍கப்படுவார் என எம்.எல்.ஏ., பரமேஸ்வரி தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, மைனர் பெண்ணை காவல் நிலையத்திற்கு வந்து அழைத்துச் செல்லுமாறு, பெற்றோருக்‍கு, மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் இருந்து தகவல் வந்தது. உடனடியாக அங்கு சென்ற பெற்றோரையும், உறவினரையும் காவல்துறையினர் மிரட்டி, எம்.எல்.ஏ.,விடம் ஏன் சென்றீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளனர். இதனையடுத்து, மைனர் பெண்ணின் உறவினர்கள் திரண்டு சென்று காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இந்நிலையில் கடத்தப்பட்ட பெண், பெற்றோரிடம் ஒப்படைக்‍கப்பட்டார். மைனர் பெண் கடத்தலுக்‍கு உடந்தையாக இருந்த பெண் எம்.எல்.ஏ., பரமேஸ்வரி மீது தமிழக அரசும், காவல்துறை உயர் அதிகாரிகளும் கடும் நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் என அப்பெண்ணின் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், மைனர் பெண்ணை கடத்திய குற்றவாளி ராஜசேகரை தற்போது கைது செய்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00