திருவாரூர் மாவட்டத்தில் அமைச்சர் ஆர். காமராஜ் உதவியுடன் பல கோடி ரூபாய் மோசடி : விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார்

Jun 22 2018 12:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவாரூர் மாவட்டத்தில், அமைச்சர் ஆர். காமராஜ் உதவியுடன் பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றது குறித்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட மங்கல் மற்றும் சித்தமலில் தொடக்‍க வேளாண்மைக்‍ கூட்டுறவு கடன் வழங்கும் சங்கத்தின் தலைவர்களாக, அன்பழகன், சிவக்‍குமார் ஆகியோர் பதவி வகித்து வந்தனர். ஆளும் கட்சிக்‍கு ஆதரவான இவர்கள், அமைச்சர் காமராஜ் துணையுடன், வங்கிகியில் சுமார் 2 கோடி ரூபாய்க்‍கும் மேல் ஊழல் செய்துள்ளதாகக்‍ கூறப்படுகிறது. விவசாயிகளுக்‍கு வழங்கப்படவேண்டிய பயிர்க்‍காப்பீட்டுத் தொகையை வழங்கியதாக கணக்‍கு காண்பித்ததாக அவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், விவசாய நிலங்களை உளுவதற்காக வாடகைக்‍கு டிராக்‍டர்கள் வழங்கப்பட்டதில் லட்சக்‍கணக்‍கான ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், பாதிக்‍கப்பட்ட மங்கல் மற்றும் சித்தமல்லி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் மற்றும் கூட்டுறவு சங்க அதிகாரிகளுக்‍கு முறையிட்டும், அவர்கள் அமைச்சர் காமராஜுக்‍கு வேண்டப்பட்டவர்கள் என்பதால், எந்த நடவடிக்‍கையும் எடுக்‍கவில்லை என குற்றம்சாட்டிய விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00