அராஜகமாக வீட்டில் புகுந்து அழைத்து செல்லப்பட்ட மதுரை புறநகர் வடக்கு மாவட்டக் கழக செயலாளர் செ.சரவணனுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முன்ஜாமின் வழங்கியது

Jun 22 2018 5:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமைச்சரின் தூண்டுதல் பேரில் காவல் துறையினரால் அராஜகமாக வீட்டில் புகுந்து அழைத்து செல்லப்பட்ட மதுரை புறநகர் வடக்கு மாவட்டக் கழக செயலாளர் திரு. செ.சரவணனுக்‍கு, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளை முன்ஜாமின் வழங்கியுள்ளது.

மதுரை மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகள் தரமற்றவகையில் போடப்படுவதை கண்டித்து கழகத்தினரும் பொதுமக்களும் அதிகாரிகளிடம் முறையிட்டனர். இதனால் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் தூண்டுதலின்பேரில் மதுரை புறநகர் வடக்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.செ.சரவணன் உட்பட 22 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மேலும் மேலூர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதி ஒதுக்கீட்டின் கீழான பணிகளுக்கு நேற்று முன்தினம் டெண்டர் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் முறைகேட்டில் ஈடுபடுவதாக கழகத்தின் சார்பிலும் ஒப்பந்த தாரர்கள் சார்பிலும் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து டெண்டர் ரத்து செய்யப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் திரு.ஆர்.பி.உதயகுமார் தூண்டுதலின் பேரில் காவல்துறையினர் நள்ளிரவில் மாவட்ட செயலாளர் வீட்டின் கதவு ஜன்னல் ஆகியவற்றை உடைத்து அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து மதுரை புறநகர் வடக்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.செ.சரவணன் உள்ளிடோரை அழைத்துச் சென்றனர். மேலும் கைது செய்தனர். காவல்துறையினரின் இந்த அராஜகத்தை தட்டிக்கேட்ட பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

நீண்டநேரம் அலைகழித்தபின்னர் திரு. சரவணனை மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். சரவணணை 15 நாள் நீதிமன்றக்‍ காவலில் வைக்‍க உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், அவருக்‍கு திடீரென உடல்நலம் பாதிக்‍கப்பட்டது. இதனால், சரவணன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டார். இந்நிலையில் அவர் ஏற்கெனவே தாக்‍கல் செய்திருந்த முன்ஜாமின் மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளையில் நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் முன்னிலையில் இன்று விசாரணைக்‍கு வந்தது. அப்போது, திரு. சரவணனுக்‍கு முன்ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00