அரசியல் சுயலாபத்திற்காக அம்மாவின் மரணம் தொடர்பாக அமைக்‍கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு எடப்பாடி பழனிசாமி நிர்வாகம் கால நீட்டிப்பு - அரசின் இயலாமையையும், செயல்படாத தன்மையையும் மறைத்துக்கொள்ளவே காலநீட்டிப்பு வழங்கப்பட்டிருப்பதாக அரசியல் நோக்‍கர்கள் குற்றச்சாட்டு

Jun 21 2018 6:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

அரசியல் சுயலாபத்திற்காக அம்மாவின் மரணம் தொடர்பாக அமைக்‍கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு எடப்பாடி நிர்வாகம் கால நீட்டிப்பு வழங்கியுள்ளது. தனது இயலாமையையும், செயல்படாத தன்மையையும் மறைத்துக்கொள்வதற்காகவே இந்த காலநீட்டிப்பு வழங்கப்பட்டிருப்பதாக அரசியல் நோக்‍கர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை வைத்துள்ள கையாலாகாத எடப்பாடி பழனிசாமி அரசின் செயல்படாத தன்மையை மறைத்துக்‍கொள்ள பல்வேறு நடவடிக்‍கைகளை எடுத்துவருகிறது. இந்நிலையில், மாண்புமிகு அம்மாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்‍கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்திற்கு காலநீட்டிப்பு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக இந்த காலநீட்டிப்பு வழங்கியுள்ள நிலையில், ஆட்சியின் தவறுகளை மூடி மறைக்‍கவே விசாரணை ஆணையம் நடத்தப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

​ அதன்படி, சென்னை டாக்‍டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தல் அன்று ஆறுமுகசாமி ஆணையம், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தியது. அதேபோல, தூத்துக்‍குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்‍கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்‍கிச் சூடு நடத்தப்பட்ட தினத்தன்று மாண்புமிகு அம்மாவுக்‍கு வழங்கப்பட்ட உணவு குறித்து பட்டியல் வெளியிடப்பட்டது. ஏற்கெனவே ஜல்லிக்‍கட்டு போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக ஆணையம் அமைக்‍கப்பட்டு விசாரணை முடங்கியுள்ளது. அதேபோல, தூத்துக்‍குடி துப்பாக்‍கிச்சூடு தொடர்பாக தனிநபர் ஆணையம் அமைக்‍கப்பட்டுள்ளது. அந்த ஆணையத்தின் செயல்பாடு தற்போது கேள்விக்‍குறியாக உள்ளது.

இந்த சூழலில், இ.பி.எஸ். அரசின் கையாலாகாத தன்மையை மறைத்துக்‍ கொள்ளவும், மாண்புமிகு அம்மாவின் மரணம் தொடர்பாக நியாயமான முறையில் விசாரணை நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அரசியல் நோக்‍கர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00