தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் விடுவிக்‍கப்பட்டதை எதிர்த்து சி.பி.ஐ. தாக்‍கல் செய்த மேல்முறையீட்டு மனு - வரும் 29ம் தேதிக்குள் பதில் அளிக்க மாறன் சகோதரர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Jun 21 2018 4:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோர் விடுவிக்‍கப்பட்டதை எதிர்த்து, சி.பி.ஐ. தாக்‍கல் செய்த மேல்முறையீட்டில் வரும் 29ம் தேதிக்‍குள் பதிலளிக்‍க மாறன் சகோதரர்களுக்‍கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் உள்ள சன்டிவி அலுவலகத்திற்கும், அடையாறில் உள்ள கலாநிதிமாறன் இல்லத்திற்கும் இடையே சட்டவிரோதமாக பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை ஏற்படுத்தியது தொடர்பான வழக்‍கில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேர் விடுவிக்‍கப்பட்டனர். இதை எதிர்த்து, சி.பி.ஐ. தரப்பில் சென்னை உயர்நீதிமன்றம் மனு தாக்‍கல் செய்யப்பட்டது. சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 4 பேர் மட்டுமே விடுவிக்க கோரி மனு தாக்கல் செய்த நிலையில், 7 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்த விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவு தவறானது என இந்த மனுவில் தெரிவிக்‍கப்பட்டிருந்தது. எனவே, மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரை விடுவித்து சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்- வழக்கை சந்திக்க குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தங்கள் தரப்பில் பதில் அளிக்க இரண்டு வாரம் கால அவகாசம் தேவை என கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கபட்டது.

ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதி, மனு தொடர்பாக வரும் 29ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00