சொந்த மாவட்ட மக்‍களையே வஞ்சித்து கொடுங்கோல் ஆட்சியை எடப்பாடி நடத்துகிறார் - கழக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

Jun 21 2018 4:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

மக்‍கள் விரும்பாத சாலை திட்டத்தை, திணிக்‍கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, சொந்த மாவட்ட மக்‍களை வஞ்சித்து கொடுங்கோல் ஆட்சி நடத்தி வருவதாக கழக துணைப்பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு கழக நிகழ்ச்சிகளில் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் பங்கேற்கிறார். இதற்காக மதுரையில் இருந்து புறப்பட்டுச் சென்ற அவருக்‍கு, பல்வேறு இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்‍கப்பட்டது. கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை, விருதுநகர் மாவட்ட எல்லையில் விருதுநகர் கிழக்‍கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு.​இன்பத்தமிழன் தலைமையில், நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் திரு.கே.கே.சிவசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விருதுநகரில் விருதுநகர் கிழக்‍கு மாவட்டக்‍ கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், கழகக்‍ கொடியினை கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் ஏற்றிவைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்‍கள் விரும்பாத சாலை திட்டத்தை, திணிக்‍கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, சொந்த மாவட்ட மக்‍களை வஞ்சித்து கொடுங்கோல் ஆட்சி நடத்தி வருவதாக கழக துணைப்பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00