தூத்துக்குடி மாவட்டத்தில் வலுக்கும் போராட்டம் - தொடரும் பதற்றம் : டாஸ்மாக் கடைக்கு தீவைப்பு, சூறை

May 24 2018 12:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

துப்பாக்‍கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. அரசு மதுபானக் கடைகளை சூறையாடப்பட்டதுடன், சிசிடிவி காமிராக்களும் அடித்து நொறுக்கப்பட்டதால், அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

சுற்றுச்சூழலை மிகமோசமாக மாசுபடுத்தி செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்‍ கோரி, தூத்துக்குடியில் 3 மாதங்களுக்கும் மேலாக 18 கிராம மக்‍கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், நூறாவது நாளாக நேற்று முன்தினம் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர். அப்போது ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. போலீசார் நடத்திய துப்பாக்‍கிச்சூட்டில் பெண்கள் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தை தடுக்‍கத்தவறிய எடப்பாடி பழனிசாமி அரசு பதவி விலக வேண்டுமென்ற​ கோரிக்‍கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, நேற்றிரவு தூவிபுரம் 7-வது தெருவில் உள்ள அரசு மதுபானக் கடை தீ வைத்து எரிக்கப்பட்டது. அதேபோல், அமெரிக்கன் மருத்துவமனை சாலையில் உள்ள டாஸ்மாக் கடையும் சூறையாடப்பட்டன. கே.வி.கே. நகரில் உள்ள சிசிடிவி காமிராக்கள் அனைத்து அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருவதால், தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளதால், காவல்துறையினரின் அராஜகங்கள் மற்றும் இந்த சம்பவங்கள் தொடர்பான வீடியோ பதிவுகள் ஒளிபரப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00