தூத்துக்‍குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவையை முடக்‍கியது தமிழக அரசு - துப்பாக்கிசூடு நிகழ்வுகளை மக்களின் பார்வையிலிருந்து மறைக்‍கும் முயற்சி என நடுநிலையாளர்கள் குற்றச்சாட்டு - துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து கடையடைப்பு

May 24 2018 12:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஸ்டெர்லைட் போராட்டத்தை தொடர்ந்து தூத்துக்‍குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் சமூக வலைதளங்கள் வாயிலாக வதந்திகள் பரப்பப்படுவதாக காரணம் கூறி, இணையதள சேவையை முடக்‍கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது, போலீசாரின் துப்பாக்‍கிச் சூட்டில் போராட்டக்‍காரர்கள் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்த சோக நிகழ்வுகள், செய்தி ஊடகங்களை விட, இணையதளம் வாயிலாக வேகமாக பரவி வருகிறது. போலீசாரின் அத்துமீறல்களும், அராஜகங்களும், அதிகார வர்க்‍கத்தின் கேலிக்‍கூத்துக்‍களும், சமூக வளைதலங்கள் மூலமாக பகிர்ந்து கொள்ளப்பட்டு வெட்ட வெளிச்சமாகி வருகின்றன. போராட்டக்‍காரர்களின் ஒருங்கிணைப்புக்‍கும், இதுவே உதவுகிறது.

இந்நிலையில், மக்‍கள், உண்மைகளை அறிந்து கொள்ளக்‍கூடாது என்ற நோக்‍கில் தூத்துக்‍குடி, நெல்லை, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவையை முடக்‍கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த செயல், தூத்துக்‍குடியில் நடைபெறும் நிகழ்வுகளை மக்‍களின் பார்வையிலிருந்து மறைக்‍கும் முயற்சி என நடுநிலையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். காவல்துறை சார்பில் வதந்திகள் சமூக வளைதலங்கள் மூலமாக பரப்பப்படுவதாக காரணம் கூறப்பட்டுள்ளது.

நிலைமை முழுமையாக சீரடைந்த பிறகு இணையதள சேவை மீண்டும் வழங்கப்படும் என அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த மூன்று மாவட்டங்களிலும் இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளதால் வரும் 30-ம் தேதிக்குள் அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ., பட்டப்படிப்புகளில் சேர விண்ணபிக்க இருந்த பிளஸ் டூ முடித்த மாணவ - மாணவிகள் விண்ணபிக்க முடியாமக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசின் இந்த நடவடிக்கையால், இவர்களின் மேல்படிப்பு கனவு தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00