தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் 96 பேர் சிறைவைப்பு : நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு

May 24 2018 11:04AM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்‍குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 96 பேரை, சட்டவிரோதமாக வல்லநாட்டில் உள்ள காவல்துறை துப்பாக்‍கிசூடு தளத்தில் மறைத்து சிறை வைக்‍கப்பட்டிருப்பதாக எழுந்த புகாரையடுத்து, அவர்களை மீட்டு ஆஜர்படுத்தும்படி தூத்துக்‍குடி மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்‍குடி, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 96 பேர் சட்டவிரோதமாக வல்லநாட்டில் உள்ள போலீஸ் துப்பாக்சூடுதளத்தில் மறைத்து சிறை வைக்‍கப்பட்டுள்ளதாக வழக்‍கறிஞர் சந்திரசேகர் என்பவர், தூத்துக்‍குடி மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பகவதி அம்மாள், மறைத்து வைக்‍கப்பட்டிருப்பது உண்மைதானா? என்பதை கண்டறியும்படி, விளாத்திகுளம் மாஜிஸ்ட்ரேட் திரு. காளிமுத்துவுக்‍கு உத்தரவிட்டார். இதையடுத்து விசாரணை நடத்திய மாஜிஸ்ட்ரேட் காளிமுத்து, அவ்வாறு மறைத்து வைக்‍கப்பட்டிருப்பது உண்மைதான் என நீதிமன்றத்தில் குறிப்பிட்டார். இதையடுத்து, மறைத்து சட்டவிரோதமாக சிறை வைக்‍கப்பட்டிருக்‍கும் 96 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி நீதிபதி பகவதிஅம்மாள் உத்தரவிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00