ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் வகையில் குறைந்த செலவில் லிப்ட் : கோவையில் ஓய்வு பெற்ற பேராசிரியர் கண்டுபிடிப்பு

Apr 25 2018 3:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோவையில், ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவர் தனது விடா முயற்சியின் மூலம், ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் வகையில் குறைந்த செலவில் லிப்ட் உருவாக்‍கப்பட்டுள்ளது. இதன்மூலம், நடுத்தர மக்களும் மிகக்‍குறைந்த செலவில் லிப்ட் அமைக்கும் முயற்சிக்கு வழி ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் கோவைபுதூரை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற பேராசிரியர் விஜயன். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று, கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் வேதியியல் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவர், கல்லூரி பணியின்போதே, பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்பித்துள்ளதோடு, படிக்கும் காலத்தில், தானியங்கி சிகரெட் மெஷினை உருவாக்கி ஆராய்ச்சியாளர்களை ஈர்த்தவர், தற்போது ஓய்வு பெற்றநிலையில், தனது வீட்டிற்கு வரும் மாமியார், மற்றும் வயதானவர்கள் ,வீட்டின் மேல்தளத்திற்கு படியில் நடந்து வருவதற்கு மிகவும் சிரமப்படுவதை அறிந்து, இதற்கு மாற்றாக புதிய திட்டத்தை வழிவகுத்தார். இதன்படி, வீட்டில் இருந்த 1 எச்பி கம்பிரசர் கொண்டு, வீட்டின்முன்புறத்தில் 12 அடி ஆழத்தில் துளையிட்டு, அதில் சிலிண்டர் வசதியை பொருத்தி, 2 இஞ்ச் பைப்பை இணைத்து, முதல்தளத்தில் 3x3 அளவு பெட்டி தயாரித்து, அதை கீழிருந்து, கம்பிரசர் காற்று மூலம் சிலிண்டர் மேலே செல்லக்கூடிய வகையில் வடிவமைத்து, சிலிண்டர் பகுதியில் வெண்டிங் மெஷின் உருவாக்கப்பட்டு 200 கிலோ எடை அளவுக்கு ஒரே நொடியில், தரைதளத்திலிருந்து முதல் தளத்திற்கு மிக எளிதாக செல்லும் வெற்றிகரமாக லிப்ட் வசதியை உருவாக்கினார். தற்போதுள்ள லிப்ட் சந்தையில் இதுவரை இரும்பு கயிறுகள் மூலம் இயங்கும் லிப்ட் வசதி மட்டுமே உள்ளது. இதனை பயன்படுத்த அதிக செலவாகும், இதற்கு மாற்றாக சொந்த பயன்பாட்டிற்காக மிக குறைந்த செலவில் ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் லிப்ட் தயாரித்து சாதனை படைத்துள்ளார், மேலும், மின்சாரம் பயன்படுத்தாமல், அதிக எடைகொண்ட சூட்கேஸ்கள், தண்ணீர் கேன்கள் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் ஆகியவை கொண்டு செல்லலாம்...

முன்னேற துடிக்கும் இன்றைய இளைஞர்களுக்கு, ஓய்வு பெற்ற பேராசிரியரின் கண்டுபிடிப்பு, புதிய யுக்திகள் ஏற்படவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதது பாராட்டுக்குரியது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00