தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி, சட்டமன்ற தேர்தல்களில் கழக வேட்பாளர்களை மகத்தான வெற்றி பெற பாடுபடும் கழகத்தினருக்கு உதவுவது என குவைத்தில் நடைபெற்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மண்டல மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

Apr 21 2018 5:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் குவைத் மண்டல மாநாடு, கழக பொதுச் செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா வழிகாட்டுதலின்படி செயல்படும், கழக துணைப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. டிடிவி தினகரன் வாழ்த்துக்களோடு, குவைத்தில் நடைபெற்றது. இதில், கழக கொள்கை பரப்பு செயலாளர் திரு. தங்க தமிழ்செல்வன், மாவட்ட கழக செயலாளர்கள் திரு. எஸ். காமராஜ், திரு. ஆர். பாலசுந்தரம், தலைமை கழக பேச்சாளர் திரு. குண்டுகல்யாணம், குவைத் நாட்டில் இயங்கி வரும் டி.வி.எஸ்., குழுமத்தின் தலைவர் டாக்டர். ஹைதர் அலி உட்பட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில், கழக பொதுச் செயளாலர் தியாகத் தலைவி சின்னம்மா வழிகாட்டுதலில் செயல்படும், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் எம்.எல்.ஏ., தலைமையில், தமிழகத்தில் வரும் உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் மகத்தான வெற்றி பெற பாடுபடுவது என்றும் தமிழகத்தை வஞ்சிக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை செயல்படுத்தும் மத்திய - மாநில அரசுகளை கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனைதொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திரு. தங்க தமிழ்செல்வன், வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நலனுக்காக, தமிழகத்தில் தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்தினார். முன்னதாக, பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00