தூத்துக்‍குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, 69வது நாளாக தொடரும் போராட்டம் - கிராம மக்‍களுக்‍கு ஆதரவாக அனல் மின் நிலைய ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Apr 21 2018 11:16AM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்‍குடியில் பொதுமக்‍களுக்‍கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, 69வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்‍களுக்‍கு ஆதரவாக அனல் மின் நிலைய ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்‍குடியில் செயல்பட்டுவரும் ஸ்டெர்லைட் ஆலையால், சுற்றுச்சூழல் பெருமளவு பாதிக்‍கப்படுவதுடன், நிலம், நீர் மற்றும் காற்றில் மாசு ஏற்பட்டு பொதுமக்‍கள் பல்வேறு நோய்களுக்‍கு ஆளாகிவருகின்றனர். இந்நிலையில், இந்த ஆலையை விரிவாக்‍கம் செய்ய நடவடிக்‍கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, ஆலை அருகே உள்ள குமரரெட்டியார் புரம் கிராமத்தினர் உட்பட 18-க்‍கும் மேற்பட்ட கிராம மக்‍கள் தொடர்ந்து 69வது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்‍கு ஆதரவாக, மாணவ-மாணவிகள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலைக்‍கு எதிராக, கழகத் துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் தலைமையில், அண்மையில், தூத்துக்‍குடியில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டமும் நடைபெற்றது. இந்நிலையில், பொதுமக்‍களுக்‍கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, தூத்துக்‍குடியில் உள்ள அரசு அனல் மின் நிலைய ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்‍குடி மாதா கோயில் வளாகத்தில், கிறிஸ்தவர்கள் தொடர்ந்து 7-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00