கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களின் கடற்பகுதியில் உயரமான அலைகள் எழும் என விடுக்‍கப்பட்ட எச்சரிக்‍கையைத் தொடர்ந்து முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கைகள் - தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

Apr 21 2018 12:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழக கடல் பகுதிகளில் அலைகள் சீற்றத்துடன் காணப்படும் என இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 2 ஆயிரத்தும் மேற்பட்ட நாட்டுபடகு மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

தமிழக கடல் பகுதிகளில் மூன்றரை மீட்டர் உயரம் வரை கடல் அலைகள் எழுந்து சீற்றதுடன் காணப்படும் என இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து நெல்லை மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு கடலில் மீன்பிடிக்க செல்ல தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி கூட்டபுளி, இடிந்தகரை, கூத்தங்குழி, பஞ்சல், குட்டம் உவரி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டு படகு மீனவர்கள், இன்று கடலில் மீன்டிக்க செல்லவில்லை.

இதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவளம், பள்ளம், மணக்குடி உள்ளிட்ட 48 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்களும், இன்று மீன்பிடிக்க செல்லவில்லை. இதன் காரணமாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் கரையிலே நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன. பொதுமக்களும் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால், சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியில், கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் சுற்றுலா படகு சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாட்டு படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதால், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர ராமேஸ்வரத்துக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்னிதீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடி தர்ப்பணம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00