அரிய நோய்க்கு வெற்றிகரமாக நடைபெற்ற அறுவை சிகிச்சை : ராயப்பேட்டை மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

Mar 23 2018 6:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

10 லட்சம் பேரில் ஓரிருவரை மட்டுமே பாதிக்‍கக்‍கூடிய நியூரோ எண்டோகிரைன் டியூமர் தாக்‍குதலுக்‍கு உள்ளான பெண்மணி ஒருவருக்‍கு சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் முதன்முறையாக அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

சென்னை பட்டினப்பாக்‍கத்தை சேர்ந்தவர் திருமதி ஜம்சத் பேகம். 45 வயதான இவருக்‍கு கடந்த 4 ஆண்டுகளாக அவ்வப்போது மயக்‍கம் ஏற்படுவது வழக்‍கமாக இருந்தது. இதற்காக நரம்பியல் மருத்துவர் உள்ளிட்ட பல்வேறு மருத்துவர்களிடம் சிகிச்சைகள் மேற்கொண்டு தற்காலிக நிவாரணங்கள் பெற்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்‍கு முன்பு சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைக்‍கு வந்த ஜம்சத் பேகத்தை, இரைப்பை குடல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்‍டர் எல். ஆனந்த் பரிசோதித்தார். அவருக்‍கு சர்க்‍கரை அளவு குறைந்தும், இன்சுலின் அளவு அதிகரித்திருந்ததும் பரிசோதனையில் தெரியவந்தது. இதனையடுத்து, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் ஜம்சத் பேகத்தின் கணையத்தின் தலை பகுதியில் கட்டி இருப்பது தெரியவந்தது.

பித்தப்பை, கணையம் உள்ளிட்ட 3 பகுதிகளை எடுத்து, பின்னர் கட்டியை அகற்றி மீண்டும் அவற்றை பொருத்தும் whipples Surgery எனப்படும் அறுவைசிகிச்சையை டாக்‍டர் ஆனந்த் தலைமயிலான குழு வெற்றிகரமாக மேற்கொண்டது. ரத்தம் ஏற்றாமல் நவீன கருவிகளின் துணையுடன் சுமார் 7 மணிநேர அறுவை சிகிச்சைக்‍குப் பின்னர் ஜம்சத் பேகம் இயல்பான உடல்நிலைக்‍கு திரும்பினார்.

சிகிச்சைக்குப் பின்னர் தனக்‍கு மயக்‍கம் ஏதும் வருவதில்லை என்றும், அனைத்து உணவுகளையும் தான் உட்கொள்வதாகவும் திருமதி ஜம்சத் பேகம் தெரிவித்தார்.

செரிமானக்‍ கோளாறு மற்றும் மயக்‍கம் உள்ளிட்ட பாதிப்புக்‍கு உள்ளானவர்கள் இரைப்பைகுடல் சிகிச்சைக்‍கான சிறப்பு மருத்துவரை அணுகினால் பெருமளவு சிரமங்களை முன்னதாகவே தவிர்த்துக்‍கொள்ள இயலும் என டாக்‍டர் ஆனந்த் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00