குரங்கணி காட்டுத்தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 20ஆக உயர்வு - மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 2 பெண்கள் உயிரிழப்பு

Mar 23 2018 3:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்‍கி காயமடைந்த மேலும் 2 பேர் இன்று உயிரிழந்தனர். இதனால் இந்த சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்‍கை 20ஆக உயர்ந்திருக்‍கும் நிலையில், இதுகுறித்த விசாரணை 2ம் நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

போடிநாயக்‍கனூர் அருகேயுள்ள குரங்கணி மலைப்பகுதியில் கடந்த வாரம் மலையேற்றப் பயிற்சிக்‍குச் சென்றவர்கள், அங்கு ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்‍கினர். இந்தச் சம்பவத்தில் 17 பேர் உயிரிழந்தது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சிலர் பலத்த காயங்களுடன் பல்வேறு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவை மருத்துவமனையில் நேற்று ஜெயஸ்ரீ என்பவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த சாய்வசுமதி என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதேபோல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிவ்யா என்பவரும் இன்று உயிரிழந்தார். அவர் சென்னையைச் சேர்ந்தவர். இதன்மூலம் குரங்கணி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது. இந்த தீ விபத்தில் காயமடைந்த மேலும் சிலருக்‍கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்‍கப்பட்டு வருகிறது.

இதனிடையே இந்த விபத்து தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அரசு முதன்மைச் செயலாளர் திரு. அதுல்ய மிஸ்ரா தலைமையிலான குழுவினர் 2ம் நாளாக இன்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். போடிநாயக்‍கனூர் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும் இதுதொடர்பான ஆலோசனையில் தீயணைப்பு, வருவாய் மற்றும் காவல்துறையினர், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், அப்பகுதி மக்‍கள் பங்கேற்றுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00