தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் சாகர்கவஜ் பாதுகாப்பு ஒத்திகை - தீவிரவாதிகளின் ஊடுருவலைத் தடுக்‍க நடவடிக்‍கை

Mar 22 2018 3:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் தீவிரவாதிகளின் ஊடுருவல்களை தடுப்பதற்கான சாகர்கவஜ் என்ற பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடல்பகுதியில் நடைபெறும் இந்த ஒத்திகையில் காவல்துறை உயரதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.

கடல் மார்க்‍கமாக நாட்டிற்குள் தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்‍க ஒவ்வொரு ஆண்டும் ஹம்லா, சாகர்கவஜ் ஆகிய பெயர்களில் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இன்று சாகர்கவஜ் ஒத்திகை தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இன்று காலையில் தொடங்கிய இந்த ஒத்திகையில் காவல்துறை உயரதிகாரிகள் பலரும் பங்கேற்றுள்ளனர்.

கன்னியாகுமரி கடல்பகுதியில் இன்றுகாலை இந்த ஒத்திகை தொடங்கியது. நாளை மாலை வரை தொடர்ந்து 2 நாட்களுக்‍கு நடைபெறும் இந்த ஒத்திகையில், 3 நவீன படகுகளுடன் 15க்‍கும் மேற்பட்ட கடலோர காவல்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் தொடங்கி, ஆரோக்‍கியபுரம் வழியாக கேரள எல்லையான நீரோடி வரை இந்த ஒத்திகை நடத்தப்படுகிறது.

இதேபோல் நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்பகுதியில் சாகர்கவஜ் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஆறுகாட்டுத்துறை கடற்பகுதியில் கடலோர பாதுகாப்பு பிரிவு டி.எஸ்.பி. திரு.கலிதீர்த்தான் தலைமையில் கடலோர பாதுகாப்புப் பிரிவு காவல்துறையினர் படகுகள் மூலம் சென்று இந்த ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி, வேதாரண்யம், கோடியக்‍கரை, புஷ்பவனம் போன்ற கடலோர சோதனைச் சாவடிகளில் வாகன சோதனையும் நடத்தப்படுகிறது.

தூத்துக்‍குடி மாவட்ட கடல் பகுதியில் ஆபரேஷன் ஒத்திகை இன்று காலை 6 மணிக்‍கு தொடங்கியது. கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்புப்படை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப்படை இணைந்து மேற்கொள்ளும் இந்த ஒத்திகை 36 மணி நேரம் நடைபெறும்.

புதுச்சேரி கடற்கரை பகுதியிலும் சாகர்கவஜ் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அம்மாநில காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் அதிநவீன படகுகள் மூலம் இந்த ஒத்திகையை கண்காணித்து வருகின்றனர். காலாப்பட்டு கடற்கரைத் தொடங்கி புதுக்‍குப்பம் கடற்கரை வரையிலான 18 மீனவ கிராமங்கள் உள்ளடக்‍கிய பகுதிகளில் இந்த ஒத்திகை நடத்தப்படுகிறது. இதில் இந்திய கடலோர காவல்படையுடன், மாநில கடலோர காவல்படையினரும் மீனவர்கள் ஒத்துழைப்புடன் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00