அதிகாரிகளின் நெருக்‍கடியால் அங்கன்வாடி ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தால் சகஊழியர்கள் கொந்தளிப்பு - நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

Mar 22 2018 3:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

நெல்லை அம்பாசமுத்திரம் அருகே, அங்கன்வாடி ஊழியர் சுமதியின் தற்கொலைக்‍கு காரணமாக, அதிகாரிகளை கைது செய்ய வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

நெல்லை வாகைகுளத்தைச் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர் சுமதி, பணி நீட்டிப்புக்‍கு அதிகாரிகள் பணம் கேட்டு நெருக்‍கடி கொடுத்ததால், தீக்‍குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், சுமதி அனுமதிக்‍கப்பட்டிருந்த மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கன்வாடி ஊழியர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சுமதியின் தற்கொலைக்‍கு அதிகாரிகள் ஜெயசூர்யா, சாந்தி ஆகியோரே காரணம் என குற்றம்சாட்டியுள்ள உறவினர்கள், தற்கொலைக்‍கு தூண்டிய அந்த அதிகாரிகளை வன்கொடுமை சட்டத்தின் கீழ், கைது செய்ய வேண்டும் எனவும் அதுவரை சுமதியின் உடலை வாங்கப்போவதில்லை எனவும் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

சுமதியின் மரணத்தால் கொதிப்படைந்துள்ள அங்கன்வாடி ஊழியர்கள், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்த சுமதியின் குடும்பத்தினருக்‍கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டுமெனவும், அவரது மகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டுமெனவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்‍கைவிடுத்துள்ளனர்.

அங்கன்வாடியில் பணம் கொடுத்தே ஊழியர்கள் பணியமர்த்தப் படுவதாக குற்றம்சாட்டியுள்ள அங்கன்வாடி ஊழியர்கள், சுமதிக்‍கு ஏற்பட்ட நிலைமை, இனி யாருக்‍கும் ஏற்படக்‍கூடாது என்றும், தங்களது கோரிக்‍கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என்றும் எச்சரித்துள்ளனர்.

அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டத்தை தொடர்ந்து, அவர்களிடம் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் எந்தவொரு உடன்பாடும் ஏற்படவில்லை. இதனையடுத்து, அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00