கழக துணை பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் உத்தரவுக்கிணங்க பெரம்பலூர் மாவட்ட கழகம் சார்பில் மாண்புமிகு அம்மாவின் 70-வது பிறந்தநாள் ஆலோசனைக் கூட்டம் : தேர்தல் எப்போது நடந்தாலும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என உறுதி

Feb 22 2018 6:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

கழக பொது செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா வழிகாட்டுதலின்பபடி, கழக துணை பொது செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு.டிடிவி தினகரன் உத்தரவுக்கிணங்க, பெரம்பலூர் மாவட்ட கழகம் சார்பில், மறைந்த மாண்புமிகு அம்மாவின் 70-வது பிறந்தநாள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

கழக பொது செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா வழிகாட்டுதலின்பபடி, கழக துணை பொது செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு.டிடிவி தினகரன் உத்தரவுக்கிணங்க, பெரம்பலூர் மாவட்ட கழகம் சார்பில், மாண்புமிகு அம்மாவின் 70-வது பிறந்தநாள்ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழக பொருளாளர் திரு.ரெங்கசாமி எம்எல்ஏ, கழக அமைப்பு செயலாளர் திரு.ஆர்.மனோகரன், பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் திரு.எஸ்.கார்த்திக்கேயன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.

இக்கூட்டத்தில் கழக பொது செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா வழிகாட்டுதலின்பபடி, செயல்படும் கழக துணை பொது செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு.டிடிவி தினகரன் தலைமையிலான கழகத்தை வலுப்படுத்தும் வகையில், புதிய உறுப்பினர் சேர்க்கை நடத்துவது எனவும், மறைந்த மாண்புமிகு அம்மாவின் பிறந்தநாளை ஏழை -எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது எனவும், வரும் உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் வெற்றியை ஈட்டுவது எனவும், காவேரி நதிநீர் பிரச்சினையில் மறைந்த மாண்புமிகு அம்மா அவர்கள் உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்தி, காவேரி பிரச்சினையில் உரிமையை நிலை நாட்டினார். ஆனால் காவேரி நதி நீர் வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்காமல் - டெல்டா விவசாயிகளுக்கு துரோகம் செய்த எடப்பாடி அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், எடப்பாடி அரசின் மக்கள் விரோதபோக்கை பொதுமக்களிடம் வீடு, வீடாக எடுத்துகூறுவது எனவும், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய கழக பொருளாளர் திரு.ரெங்கசாமி, 18 சட்டமன்ற உறுப்பினர்களின் தீர்ப்பு வரும் நாள், எடப்பாடி, ஓ.பி.எஸ் ஆகியோருக்கு முடிவு கட்டும் நாள் என்றும், தேர்தல் எப்போது நடந்தாலும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்றும் உறுதி அளித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00