'ஏர்செல்' சேவை முடங்கியதால் செல்போன் வாடிக்கையாளர்கள் கடும் பாதிப்பு - பல நகரங்களில் முற்றுகைப் போராட்டம்

Feb 22 2018 1:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏர்செல் சேவை முற்றிலும் முடங்கியுள்ளதால், பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் சிரமம் அடைந்துள்ளனர். இதையடுத்து, 2வது நாளாக ஏர்செல் நிறுவனத்தை ஏராளமானோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோயம்புத்தூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஏர்செல் நிறுவனம் முதன் முதலாக கிராமங்களில் டெலிகாம் டவர் அமைத்து செல்போன் இணைப்புகளை தந்தது. இதனால் நாளடைவில் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை ஏர்செல் நிறுவனம் ஈர்த்தது.

இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் ஏர்செல் நிறுவனம் சேவை வழங்கி வரும் நிலையில், சில மாதங்களுக்கு முன்பாக ரிலையன்ஸ் நிறுவனத்திடம் தனது நிறுவன அலைவரிசைகளை டெலிகாம் டவர்களுடன் சேர்த்து விற்பனை செய்தது. அதைத் தொடர்ந்து அங்கு செயல்பட்ட ஏர்செல் கிளைகள் மூடப்பட்டன. ஆனால், தமிழகத்தில் ஏர்செல் தனது சேவையை தொடர்ந்து வழங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஏர்செல் தனது நிறுவனத்தைத் திவால் என்று அறிவிக்கக் கோரி, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் அமைப்பிடம் அணுகியுள்ளது.

இதனிடையே, கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஏர்செல் நிறுவனத்தின் சிக்னல் சரியாக கிடைக்காமல் வாடிக்கையாளர்கள் சிரமம் அடைந்தனர். இதேபோல், திருச்சி நகர்ம மற்றும் மணப்பாறை, முசிறி, லால்குடி, துறையூர், திருவெறும்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், ஏர்செல் சேவை முற்றிலும் முடங்கியுள்ளதால் வாடிக்கையாளர்கள், சம்பந்தப்பட்ட நிறுவனத்தை முற்றுகையிட்டு 2வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00