சென்னையை அடுத்த பூந்தமல்லி சாலையில் டேங்கர் லாரி மோதி பயங்கர தீவிபத்து

Feb 21 2018 12:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையை அடுத்த பூந்தமல்லி பகுதியில் சாலையில் சென்றகொண்டிருந்த ஒரு டேங்கர் லாரி விபத்துக்‍குள்ளானதில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலிருந்து சென்னைக்‍கு வந்த ஆயில் டேங்கர் லாரி, இன்று அதிகாலை மீஞ்சூர் - வண்டலூர் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தது. வண்டலூரை நோக்‍கிச் சென்ற இந்த லாரி, நசரத்பேட்டை பகுதியில் முன்னாள் சென்ற வாகனங்களை முந்துவதற்கு முற்பட்டபோது, கட்டுப்பாட்டை இழந்து எதிரே இருந்த வழிகாட்டு பலகை தூணின் மீது பயங்கரமாக மோதியது. பின்னர் வழிகாட்டும் பலகை லாரிமீது விழுந்ததில் டேங்கிலிருந்த கச்சா எண்ணெய் தீப்பிடித்து லாரி முழுவதும் பற்றி எரியத் தொடங்கியது. அப்போது, வாகன ஓட்டுநரும், அவரது உதவியாளரும் லாரியிலிருந்து கீழே குதித்து உயிர் தப்பினர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் மதுரவாயல் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்‍கும் முயற்சியில் ஈடுபட்டனர். கிண்டி, வடபழனி ஆகிய பகுதிகளிலிருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்‍கப்பட்டு தீயை அணைக்‍கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதன்மூலம் 2 மணிநேரத்தில் தீ கட்டுக்‍குள் கொண்டுவரப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00