பேருந்துக்‍ கட்டண உயர்வுக்‍கு, தமிழகம் முழுவதும் வலுக்‍கிறது எதிர்ப்பு - மக்‍கள் நலனை முற்றிலுமாகப் புறக்‍கணித்த எடப்பாடி அரசைக்‍ கண்டித்து, பல்வேறு தரப்பினரும் ஆர்ப்பாட்டம் - சாலை மறியல் மற்றும் முற்றுகைப் போராட்டங்களில் ஈடுபட்டு அரசுக்‍குக்‍ கண்டனம்

Jan 23 2018 12:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகம் முழுவதும் பேருந்து கட்டண உயர்வுக்‍கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றன. இந்தக்‍ கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறவேண்டுமென பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பேருந்து கட்டண உயர்வுக்‍கு எதிராக போராட்டங்கள் வலுத்துவரும் நிலையில், தமிழக அரசின் இந்த நடவடிக்‍கை சட்டவிரோதம் என அம்மாவட்ட வழக்‍கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இதற்கு எதிராக அரசு போக்‍குவரத்துக்‍ கழகம் மீது வழக்‍குப் பதிவு செய்ய இருப்பதாக, இதுகுறித்து எமது நெல்லை செய்தியாளருடன் கலந்துரையாடிய வழக்‍கறிஞர் திரு. ராஜேந்திரன் தெரிவித்தார்.

நாகப்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு செய்தியாளருக்‍குப் பேட்டியளித்த அக்‍கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவர் திரு. ஜே. அஸ்லம் பாஷா, மக்‍கள் நலன் கருதி பேருந்து கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்யவேண்டுமெனக்‍ கேட்டுக்‍ கொண்டார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழக அரசு பேருந்து கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தி, மார்க்‍சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்‍கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று அரசுக்‍கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

நெல்லையில் நாம் தமிழர் கட்சி சார்பில் பேருந்து கட்டண உயர்வுக்‍கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்‍கட்சியைச் சேர்ந்த நூற்றுக்‍கணக்‍கானோர் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்தக்‍ கட்டண உயர்வை தமிழக அரசு திரும்பப் பெறாவிட்டால், மேலும் போராட்டம் தீவிரமடையும் என அவர்கள் எச்சரித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00