பேருந்து கட்டண உயர்வால் ஏழை மக்களுக்கு பெரும் பின்னடைவு : தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு

Jan 24 2018 12:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

பேருந்து கட்டணத்தை 60 சதவீதம் வரை உயர்த்தி, ஏழை, எளிய மக்களின் வாழ்வில் பெரும் பின்னடைவை தமிழக அரசு ஏற்படுத்தி விட்டதாக தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

மக்களின் நம்பிக்கையை இழந்த அரசாக தமிழக அரசு உள்ளதாக தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு.ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். மேலும் திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பேருந்து கட்டண உயர்வை கண்டித்து வரும் 29ம் தேதி த.மா.கா சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

ராமாநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவர் திரு.யுவராஜா, தமிழகத்தில் நிதிநிலை மோசமாக இருக்கும் சூழலில் சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை மட்டும் எவ்வாறு உயர்த்த முடிந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக அரசு எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி பேருந்து கட்டணத்தை உயர்தியுள்ளதை, உடனடியாக மறு பரிசிலினை செய்து, பேருந்து கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் திரு.முபாரக் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00