கிருஷ்ணகிரியில் பழம்தின்னி வவ்வால்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : கிராம மக்கள் கோரிக்கை

Jan 22 2018 5:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

கிருஷ்ணகிரியில், அழிந்து வரும், பழம்தின்னி வவ்வால்களை பாதுகாக்‍க நடவடிக்‍கை எடுக்‍க வேண்டுமென கோரிக்‍கை எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரி அருகே ஜிஞ்சுப்பள்ளி கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான ஆலமரம் உள்ளது. இங்கு, கடந்த நூறாண்டுகளுக்‍கும் மேலாக ஆயிரக்‍கணக்‍கான வவ்வால்கள் வசித்து வருகின்றன. இவற்றுக்‍கு எந்தவித இடையூறும் செய்யாமல் கிராம மக்‍கள் மிகுந்த எச்சரிக்‍கையுடன் பாதுகாத்து வருகின்றனர். இந்த வவ்வால்கள் பகலில் ஆலமரத்தில் தங்கிவிட்டு மாலையில் உணவு தேடி பல்வேறு பகுதிகளுக்‍குச் சென்று, மீண்டும் ஆலமரத்தை வந்தடைகின்றன.

ஆனால், தற்போது உணவு​தேடி வெளியிடங்களுக்‍குச் செல்லும் இந்த வவ்வால்களை விஷமிகள் சிலர் வேட்டையாடுவதால் இதன் எண்ணிக்‍கை நாளுக்‍குநாள் குறைந்து வருகிறது. மேலும், ஆலமரத்தின் கிளைகளும் உடைந்து விழுவதால், வவ்வால்கள் அடிபட்டு இறந்துவிடுகின்றன.

அழியும் தருவாயில் உள்ள இந்த வவ்வால்களை பாதுகாக்‍க வனத்துறையினரும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்‍க வேண்டுமென கிராம மக்‍கள் கோரிக்‍கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00