பேருந்து கட்டண உயர்வால் கொந்தளிக்‍கும் தமிழக மக்‍கள் - திரும்பப் பெற வலியுறுத்தி பல்வேறு இடங்களில் போராட்டம் - வகுப்புகளைப் புறக்‍கணித்து சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள்

Jan 23 2018 4:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில், பேருந்துக் கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதால், தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஏழை-எளிய, நடுத்தர மக்‍களை பெரிதும் பாதிக்‍கும் கட்டண உயர்வை தமிழக அரசு, உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழக அரசின் பேருந்துக் கட்டண உயர்வுக்கு, தமிழகம் முழுவதும் பொதுமக்கள், தொடர்ந்து தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அரசுப் போக்‍குவரத்துக்‍ கழகம் நிதிநெருக்‍கடியில் சிக்‍கியிருப்பதாக காரணம்காட்டி, பொதுமக்‍கள் மீது சுமையைத் திணிப்பது ஏற்றுக்‍கொள்ளமுடியாது என்றும், பேருந்துக்‍ கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் எனவும் பொதுமக்‍கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சோசலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆஃப் இந்தியா - கம்யூனிஸ்ட் அமைப்பு சார்பில், இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏழை-எளிய, நடுத்தர மக்‍களை கடுமையாக பாதிக்‍கும் பேருந்து கட்டணத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் -​ போக்‍குவரத்துக்‍கழகத்தில் நிலவும் நிர்வாக சீர்கேட்டை, ஊழலை களைய நடவடிக்‍கை எடுக்‍காமல், பேருந்து கட்டணத்தை உயர்த்தியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00