பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சாலை மறியல் : வகுப்புகளைப் புறக்கணித்து மாணவிகள் போராட்டம்

Jan 23 2018 4:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

பேருந்து கட்டண உயர்வைக்‍ கண்டித்து திருப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களுக்‍கு ஆதரவாக பொதுமக்‍களும் பங்கேற்றதால் போக்‍குவரத்து கடுமையாக பாதிக்‍கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் திடீர் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து திருப்பூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து கல்லூரி செல்ல இருந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், பேருந்து நிலையம் முன்பு பேருந்துகளை சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருப்பூர்-பெருமாநல்லூர் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்‍களுடன் திருப்பூர் வடக்‍கு தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், போராட்டத்தை கைவிட மறுத்த மாணவர்கள், புதிய பேருந்து நிலையத்தின் உட்புறம் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களின் இந்தப் போராட்டத்தால் திருப்பூரில் பரபரப்பு நிலவுகிறது.

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரி மாணவிகள், கல்லூரி நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்டண உயர்வை திரும்பப்பெறும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் மாணவிகள் எச்சரிக்‍கை விடுத்தனர். ஆர்ப்பாட்டத்தில் 300-க்‍கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல், திருவண்ணாமலை நகரின் கிரிவலப்பாதையில் அமைந்திருக்‍கும் அரசு கலைக்‍கல்லூரி மாணவ, மாணவிகளும் வகுப்புகளை புறக்‍கணித்து கல்லூரி முன்பு போராட்டம் நடத்தினர். இந்தக்‍ கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

தமிழக அரசைக்‍ கண்டித்து அரியலூர் அரசினர் கலைக்கல்லூரியை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், தங்களது வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்து கட்டண உயர்வினை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென மாணவ, மாணவிகள் வலியுறுத்தினர்.

பேருந்து கட்டண உயர்வை கண்டித்தும், இலவச பேருந்து அட்டை வைத்துள்ள மாணவிகளை அரசுப் பேருந்துகளில் ஏற்ற மறுப்பதைக்‍ கண்டித்தும் கும்பகோணம் அரசு பெண்கள் கல்லூரி மாணவிகள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், வகுப்புகளைப் புறக்‍கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்து கட்டண உயர்வால் தாங்கள் கல்வி பயில்வது கேள்விக்‍குறியாகி உள்ளதாகவும் மாணவிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00