கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எம்.எல்.ஏ அறிவுறுத்தலின்படி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாள் விழா : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுக்கூட்டம்

Jan 22 2018 1:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா ஆணைப்படியும், துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் எம்.எல்.ஏ அறிவுறுத்தலின்படியும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாள் விழா பொதுக்‍கூட்டம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றன.

தென்சென்னை வடக்கு மாவட்டம், அண்ணா நகர் பகுதிக் கழகம் சார்பில், எம்.ஜி.ஆர். 101-வது பிறந்தநாள் விழா பொதுக்‍கூட்டம் அமைந்தகரையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தென்சென்னை வடக்கு மாவட்டக் கழக செயலாளர் திரு. வி.பி. கலைராஜன், மூன்றாயிரம் பேருக்‍கு வேட்டி, சேலை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அண்ணாநகர் பகுதிக்கழக செயலாளர் திரு. கே.என். குணசேகரன் உள்ளிட்ட திரளான கழக நிர்வாகிகள் பங்கேற்ற இக்‍கூட்டத்தில், ஆயிரம் இளைஞர்கள் கழகத்தில் இணைந்தனர்.

ஈரோடு மாநகர் மாவட்டக் கழகம் சார்பில், பவானியில், எம்.ஜி.ஆர். 101- வது பிறந்தநாள் விழா மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்ற இக்‍கூட்டத்தில், பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி ஏராளமானோர் கழகத்தில் இணைந்தனர்.

கடலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். 101-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், கழக கொள்கைபரப்பு துணைச் செயலாளர் திரு. நாஞ்சில் சம்பத், கழக அமைப்புச் செயலாளர் திரு. புகழேந்தி உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00