கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா ஒப்புதலுடன் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் கழக துணைப் பொதுச் செயலாளரும், வெற்றி வேட்பாளருமான டிடிவி தினகரன் இன்று 11வது நாளாக அனல் பறக்‍கும் சூறாவளி பிரச்சாரம் - ஆர்.கே.நகர் தொகுதியில் இளைஞர்களுக்‍கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என உறுதி

Dec 19 2017 12:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில், கழகப் பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா ஒப்புதலுடன் போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதி வெற்றி வேட்பாளரும், கழக துணைப் பொதுச்செயலாளருமான திரு. டிடிவி தினகரன், இன்று காலையிலேயே தனது சூறாவளி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். கடந்த ஆறு மாதங்களாக தொகுதிக்கு எதுவும் செய்யாத, ஓ.பி.எஸ் - இ.பி.எஸ். அணியினர் தற்போது ஸ்கூட்டி தருவதாக கூறி மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள் என்றும், அவர்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் மக்கள் பிரஷர் குக்கர் சின்னத்தையே வெற்றி பெற செய்வார்கள் என்றும் பிரச்சாரத்தின் போது திரு. டிடிவி. தினகரன் உறுதிபட கூறினார்.

கழகப் பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா ஒப்புதலுடன், ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில், போட்டியிடும் வெற்றி வேட்பாளரும், கழக துணைப் பொதுச்செயலாளருமான திரு. டிடிவி தினகரன், பிரஷர் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார். இன்று 11-வது நாளாக அவர் பிரச்சாரத்தை காலையிலேயே தொடங்கினார். ஞாயிற்றுகிழமை என்பதால், முதலில் பூண்டி தங்கம்மாள் தெருவில் உள்ள சீயோன் சபையில் பிரச்சாரத்தை தொடங்கிய திரு. டிடிவி தினகரன், சபையினரிடையே வாக்கு சேகரித்தார்.

இதைதொடர்ந்து, டி.எஸ். ரோடு, இரட்டைசுழி 1, 2-வது தெருக்களில் பிரச்சாரம் செய்தபோது அவருக்கு, இருபுறமும் கூடி இருந்த மக்கள் மலர்தூவியும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய திரு. டிடிவி தினகரன், கொள்ளையடித்த பணத்தை ஓ.பி.எஸ் - இ.பி.எஸ். அணியினர், தொகுதி முழுவதும் வாரி இரைத்து வருவதாகவும், மக்கள் ஏமாளிகள் அல்ல என்றும், எத்தனை பணம் கொடுத்தாலும் வாக்காளர்கள் பிரஷர் குக்கர் சின்னத்தையே வெற்றிபெற செய்வார்கள் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

இதனைதொடர்ந்து தண்டையார்பேட்டையில் உள்ள சேணியம்மன் கோவில் தெருவில் திரு. டிடிவி தினகரன் பிரச்சாரம் செய்தபோது, சிறுவர்கள் சிலம்பம் சுற்றி வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து சேணியம்மன் கோவில் சார்பில், திரு. டிடிவி தினகரனுக்கு பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அங்கு உரையாற்றிய திரு. டிடிவி தினகரன், இந்தப் பகுதியில் வீட்டுவசதி வாரிய வீடுகள் யாருக்கும் ஒதுக்கப்படாமல் காலியாக இருப்பதாகவும், தாம் வெற்றி பெற்றவுடன் வீடுகளை உரிய முறையில் வழங்குவேன் என்றும் உறுதியளித்தார்.

பின்னர் தண்டையார்பேட்டை திலகர் நகரில் வாக்‍கு சேகரித்த கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன், வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். தாம் வெற்றிபெற்றவுடன் இப்பகுதியில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்‍கு வேலைவாய்ப்பு வழங்க முகாம்களை நடத்தவிருப்பதாகவும், அப்போது திரு.டிடிவி தினகரன் உறுதியளித்தார்.

பின்னர் திலகர்நகர், சுனாமி குடியிருப்பு பகுதியில் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன், அங்குள்ள விஜயகுமார்-சுப்புலட்சுமி தம்பதியின் பெண் குழந்தைக்‍கு ஜெயலலிதா என்றும், சிவராஜ்-ஆயிஷாபானு தம்பதியின் ஆண் குழந்தைக்‍கு ஜெயச்சந்திரன் என்றும் பெயர் சூட்டினார். இதனைத் தொடர்ந்து பழைய வண்ணாரப்பேட்டை பகுதிக்‍கு உட்பட்ட அப்பாசாமி தோட்டப்பகுதியில் திரு.டிடிவி தினகரன் வாக்‍கு சேகரித்தார்.

இதனைதொடர்ந்து பழைய வண்ணாரப்பேட்டை அப்பாசாமி தெரு, மேட்டுத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்த பின்னர், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன், ரத்தின சபாபதி தெரு, சின்ன ஸ்டான்லி வழியாக குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதி ஆகிய இடங்களில் வாக்கு சேகரித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00