ஆத்தூர் தொகுதி எம்.எல்.ஏ வுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்க முயன்றவர் கைது : பொய் வழக்கு பதிவு செய்து போலீசார் அராஜகம்

Dec 18 2017 12:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆத்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சின்னத்தம்பியை கண்டித்து, உண்ணாவிரதம் இருக்க வந்த காரணத்திற்காக, வழக்கறிஞர் சுரேஷ் என்பவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் தொகுதி அ.தி.மு.க MLA தற்போது நடைபெறவுள்ள RK நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்ய RK நகர்க்கு தனது ஆதரவாளர்களுடன் சென்று உள்ளார். அங்கு சுனாமி நகரில் வாக்கு சேகரிக்க சென்ற MLA சின்னதம்பி பெண்களுடன் குத்தாட்டம் போடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் ஆத்தூரை சேர்ந்த வாழ்வா சாவா கட்சியின் மாநில தலைவர் வழக்கறிஞர் சுரேஷ் என்பவர், அதிமுக MLA வின் செயலை கண்டித்து, தொகுதி MLA அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்த சென்றார். அப்பொழுது அங்கு வந்த போலிசார் சுரேசை வழிமறித்து கைது செய்து காவல் நிலையத்திற்க்கு அழைத்து சென்றனர். இந்நிலையில் வழக்கறிஞர் சுரேஷ் மீது வழக்கு ஏதுவும் பதிவு செய்யாமல் இருந்த போலிசார் பொய்யான தகவலின் பேரில் சுரேஷ் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து உள்ளனர். இதையறிந்த வழக்கறிஞர் சுரேஷ் தன் மீது வேண்டுமென்றே பொய்வழக்கு போடுவதாக கூறி காவல் நிலையத்தில் போலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதைதொடர்ந்து போலிசார் சுரேசை ஜீப்பில் வலுக்‍கட்டாயமாக ஏற்றி சேலம் நீதிமன்றத்திற்க்கு கொண்டுசென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00