வீரகபிலன் உடலுக்கு கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் திவாகரன் உள்ளிட்டோர் அஞ்சலி : இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பு

Nov 20 2017 2:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

மாரடைப்பால் காலமான பேராவூரணி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீரகபிலன் உடலுக்‍கு கழகப்பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா சார்பில் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் மற்றும் திரு. திவாகரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றம் தொகுதியில் 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்த எம்.ஆர். வீரகபிலன் நேற்று முன்தினம் இரவு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். திருச்சிற்றம்பலம் பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற கழகத்துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் மற்றும் திவாகரன் உள்ளிட்டோர் உயிரிழந்த வீரகபிலனின் உடலுக்‍கு கழகப்பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா சார்பில் அஞ்சலி செலுத்தி இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். அப்போது, நல்ல நண்பனாகவும், சிறந்த கழக நிர்வாகியாகவும் திகழந்தவர் வீரகபிலன் என திரு. டிடிவி தினகரன் புகழாரம் சூட்டினார்.

இந்த இறுதி ஊர்வலத்தில் தகுதி நீக்‍கம் செய்யப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்‍கு தொடர்ந்துள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. தங்க தமிழ்ச்செல்வன், திரு.எம். ரெங்கசாமி, திரு. ரத்தினசபாபதி, தஞ்சை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு. மா. சேகர், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் திரு.ராஜேஸ்வரன், கழக ஒன்றியச் செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00