தமிழக மீனவர்கள் மேலும் 8 பேரை பிடித்துச்சென்றது இலங்கை கடற்படை - மத்திய-மாநில அரசுகள் மவுனம் சாதிப்பதால் மீனவ மக்‍கள் கொந்தளிப்பு

Nov 20 2017 1:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக்‍ கூறி ராமேஸ்வரம் மற்றும் மண்டபத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றுள்ளனர். அவர்களின் 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

வாழ்வாதாரத்திற்காக கடலுக்‍குச் செல்லும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படை எல்லைத் தாண்டியதாகக்‍ கூறி பிடித்துச் செல்வது தொடர்கதையாக மாறிவருகிறது. இந்நிலையில், ராமேஸ்வரத்தில் உள்ள ஜெய்லஸ்மில்டன், நவீன் உள்ளிட்ட 4 மீனவர்கள் நேற்று மீன்பிடித்துக்‍ கொண்டிருந்தனர். அவர்களது படகை சுற்றி வளைத்த இலங்கை கடற்படை, எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாகக்‍ கூறி அவர்களை கைது செய்து காரைநகர் கடற்படை முகாமுக்‍கு கொண்டுசென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று, மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்‍கச் சென்ற சண்முகவேல், முனியாண்டி உள்ளிட்ட 4 மீனவர்களையும், இதே குற்றச்சாட்டின்பேரில் இலங்கை கடற்படையினர் கைது செய்து காங்கேசன் துறைமுகம் முகாமிற்கு கொண்டுசென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மீனவர்கள் பயன்படுத்திய 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

ஏற்கெனவே இலங்கை சிறைகளில், 90க்‍கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் அடைக்‍கப்பட்டிருக்‍கும் நிலையில், தொடர்ந்து இதுபோன்ற கைது நடவடிக்‍கைகளில் இலங்கை கடற்படை ஈடுபட்டு வருவது தமிழக மீனவர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய-மாநில அரசுகள் இதுவரை இலங்கை அரசைக்‍ கட்டுப்படுத்த எந்த நடவடிக்‍கையும் மேற்கொள்ளாதது மீனவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00