டிடிவி தினகரன் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் மாவட்ட, நகர, பகுதி, ஒன்றிய மற்றும் கிளைக்கழகங்கள் சார்பில் கழகத் தொண்டர்கள் சிறப்பு முகாம்கள் அமைத்து மக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கி வருகின்றனர்

Oct 21 2017 11:14AM
எழுத்தின் அளவு: அ + அ -

கழகப் பொதுச் செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா வழியில் செயல்படும், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் ஆணைக்‍கிணங்க, டெங்கு நோயைத் தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் மாவட்ட, நகர, பகுதி, ஒன்றிய மற்றும் கிளைக்கழகங்கள் சார்பில், கழகத் தொண்டர்கள் சிறப்பு முகாம்கள் அமைத்து மக்‍களுக்‍கு நிலவேம்புக்‍ குடிநீர் வழங்கி வருகின்றனர்.

கழகப் பொதுச் செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா வழியில் செயல்படும், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் ஆணைக்‍கிணங்க, கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு ஒன்றிய கழகம் சார்பில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் வகையில் திங்கள் நகர் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் திரு. பச்சைமால் உட்பட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல், மதுரை புறநகர் மாவட்ட கழகம் சார்பில், உசிலம்பட்டி, எழுமலை பகுதிகளில் மாணவ - மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம், பப்பாளி இலைச்சாறு போன்றவை வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் புறநகர் மாவட்ட கழக செயலாளர் திரு. இ. மகேந்திரன் பங்கேற்று, டெங்கு நோயை தடுப்பது குறித்து விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கினார்.

தென்சென்னை வடக்‍கு மாவட்டக்‍கழகத்தின் சார்பில் சென்னை தியாகராயநகர் பகுதியில், பொதுமக்‍களுக்‍கு நில வேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இதில் தென்சென்னை வடக்‍கு மாவட்ட கழகச் செயலாளர் திரு.வி.பி. கலைராஜன், தி.நகர் வடக்‍கு பகுதி கழகச் செயலாளர் திரு.அசோக்‍குமார், தெற்குப்பகுதி கழகச் செயலாளர் திரு.வீரபத்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00