தமிழக அரசின் நிர்வாகத் திறமையின்மை மற்றும் சுகாதாரத்துறையின் அலட்சியப் போக்‍கு காரணமாக தமிழகத்தில் வேகமாகப் பரவும் டெங்கு காய்ச்சல் : தொடரும் உயிரிழப்புகளால் பொதுமக்‍கள் பீதி

Oct 21 2017 10:51AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழக அரசின் நிர்வாகத் திறமையின்மை மற்றும் சுகாதாரத்துறையின் அலட்சியப் போக்‍கு காரணமாக தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி, உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை அடுத்த உடையார்குளம் கிராமத்தில், டெங்கு காய்ச்சலால் பாதிக்‍கப்பட்டு 50-க்‍கும் மேற்பட்ட குழந்தைகள் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்‍கப்பட்டு இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதால் பொதுமக்‍கள் பீதியடைந்துள்ளனர்.

இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த அருணா என்பவரின் 6 வயது மகள் சந்தியா, டெங்கு காய்ச்சலால் பாதிக்‍கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேல் சிகிச்சைக்‍காக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவ மனையில் அனுமதிக்‍கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00