பயிர்க்‍காப்பீட்டு தொகையை உடனே வழங்க வலியுறுத்தி பல்வேறு இடங்களில் விவசாயிகள் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் - நெல்லையில் வாயில் கறுப்பு துணி கட்டி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்

Oct 20 2017 5:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

பயிர்க்‍காப்பீடு தொகை வழங்காத தமிழக அரசைக்‍ கண்டித்து. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலவலக வளாகத்தில் விவசாயிகள் குறைதீர்க்‍கும் நாள் கூட்டம் நடைபெற்றது. வறட்சியால் பாதிக்‍கப்பட்ட விவசாயிகளுக்‍கு நிதி வழங்கப்படும் என அறிவித்து பல மாதங்கள் ஆகியும் இதுவரை நிவாரணத்தொகை வழங்கப்படவில்லை எனக்‍கூறி விவசாயிகள் வாயில் கறுப்புதுணி கட்டி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை எடுத்துக்‍கூறியும் இதுவரை நடவடிக்‍கை எடுக்‍கப்படவில்லை என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டினர். அம்பாசமுத்திரம் பகுதியில் தற்போது நெல் நடவுப்பணி நடைபெற்று வரும் நிலையில், தேவையான உரங்களை வேளாண் துறையினர் விவசாயிகளுக்‍கு வழங்க மறுப்பதாகவும் குற்றம் சாட்டினர்.

இதேபோன்று, ராமநாதபுர மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பாக 51 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயிர்க்‍காப்பீட்டு இழப்பீடு வழங்க வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 2016-2017ம் ஆண்டிற்கு காப்பீட்டு தொகை செலுத்தியும் இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை என்று கூறி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில், வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடாததைக்‍ கண்டித்து விவசாயிகளில் ஒருபிரிவினர் முழக்‍கமிட்டனர். இதனால் விவசாயிகளின் இரண்டு பிரிவினருக்‍கிடையே வாக்‍குவாதம் ஏற்பட்டது. பின்னர் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்‍கை விடுத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00