பொறையாறு பணிமனை விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்து போராட்டம் - போராட்டக்காரர்கள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு - மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட இடங்களில் பேருந்துகள் நிறுத்தம் - பொறையாறில் கடையடைப்பு போராட்டம்

Oct 22 2017 12:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகை மாவட்டம் பொறையாறு அரசு போக்குவரத்து கழக பணிமனை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோரின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நேரில் பார்வையிட வந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியனை பொதுமக்‍களும், தொழிலாளர்களும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை மாவட்டம் பொறையாறு அரசு போக்குவரத்து கழக பணிமனை இன்று அதிகாலை இடிந்து விழுந்து 8 பேர் உயிரிழந்தனர். இதில் 3 பேர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தோரின் உடல்கள் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட போதிலும், அவற்றை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தை பார்வையிட வந்த அமைச்சர் ஓ.எஸ். மணியனை தொழிலாளர்களும், பொதுமக்‍களும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களைக்‍ கலைக்‍க முயன்ற போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து போராட்டக்‍காரர்கள் அனைவரும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.

இதனிடையே, பணிமனை இடிந்து விழுந்து தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து பொறையாறு, மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட இடங்களில் அரசுப் பேருந்துகள் இயக்‍கப்படவில்லை. இதனால் பள்ளி மாணவர்கள், பொதுமக்‍கள் கடுமையாக பாதிக்‍கப்பட்டுள்ளனர்.

பொறையாறு பகுதியில் கடையடைப்பு போராட்டமும் நடைபெற்று வருவதால் நாகை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பதற்றம் நிலவுகிறது.

இதனிடையே, கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து மயிலாடுதுறை, சிதம்பரம் வழியாக பேருந்துகள் இயக்‍கப்படாதால் பயணிகள் கடும் அவதிக்‍குள்ளாகியுள்ளனர். தீபாவளிப் பண்டிகைக்கு வந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் பல மணி நேரமாக தவித்து வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00