கல்லூரி மாணவரின் மூக்கில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சையின்றி அதிநவீன கருவி மூலம் அகற்றி விழுப்புரம் அரசு மருத்துவர்கள் சாதனை

Aug 19 2017 1:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்‍குறிச்சியை சேர்ந்த கூலித்தொழிலாளி கணேசன் என்பவரின் 18 வயது மகன் சத்தியராஜ், முதலாமாண்டு பட்டப்படிப்பு பயின்று வருகிறார். இவருக்‍கு கடந்த ஓராண்டாக வலது மூக்‍கில் இருந்து ரத்தம் வழிந்து வந்தது. பல்வேறு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றும் ரத்தம் வழிவது நிற்கவில்லை.

இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்‍கு முன்பு விழுப்புரம் அரசு மருத்துவக்‍கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்ட சத்தியராஜுக்‍கு பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்‍குப் பிறகு, அவரது வலது மூக்‍கில் இருந்து மூளையின் அடிப்பாகம் வரை சுமார் 6 சென்டிமீட்டர் அளவுக்‍கு கட்டி வளர்ந்திருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதனையடுத்து, அறுவை சிகிச்சை ஏதுமின்றி அதிநவீன கருவி மூலம் கட்டி அகற்றப்பட்டது.

தனியார் மருத்துவமனையில் 6 லட்சம் ரூபாய் வரை செலவாகும் நிலையில், மறைந்த மாண்புமிகு அம்மா அறிமுகப்படுத்திய முதலமைச்சரின் விரிவான மருத்துவக்‍ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம், சத்தியராஜுக்‍கு இலவசமாக சிகிச்சை அளிக்‍கப்பட்டது.

சிகிச்சைக்‍குப் பின்னர் சத்தியராஜ் பூரண உடல்நலம் பெற்றுள்ளதால், அவரது உறவினர்களும், கல்லூரி நண்பர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00