சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடரும் கனமழை - நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

Aug 20 2017 11:50AM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால், சாலையில் தண்ணீர் பெருக்‍கெடுத்து ஓடுகிறது.

வட தமிழகத்தின் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்‍கு சுழற்சி காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

இதேபோல் ஆலந்தூர், பல்லாவரம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.

திருவொற்றியூர், மணலி, எண்ணூர், மாதவரம், செங்குன்றம், பூந்தமல்லி, போரூர், அம்பத்தூர், ஆவடி, பெரியபாளையம் ஆகிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.

திருச்சியில் ஸ்ரீ்ரங்கம், சத்திரம் பேருந்து நிலையம், பாலக்கரை, தில்லை நகர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

கும்பகோணத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். அதேபோல், பாபநாசம், திருப்பனந்தாள் ஆகிய பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை, துடுப்பதி, திங்களூர், கவுந்தபாடி, கோபிசெட்டிபாளையம், நம்பியூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் மானாவரி பயிர்களான மக்காசோளம், கடலை, துவரை போன்றவைகளை பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

நாகை, சீர்காழி, வேளாங்கண்ணி ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்ததால், அங்குள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

வேலூர், காட்பாடி, ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜாப்பேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

தேனி மாவட்டம் கம்பம், சின்னமனூர், போடி, பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் மானாவரிப் பயிர்களான கம்பு, சோளம், கேழ்விரகு போன்றவைகளை பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனிடையே, வட தமிழகம் மற்றும் தென் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் இன்று முதல் மழையின் அளவு படிப்படியாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00