மாண்புமிகு அம்மாவுடன் 33 ஆண்டுகளுக்‍கும் மேலாக உற்ற தோழியாகவும் சகோதரியாகவும் உடனிருந்து, கழகத்தைக் கட்டிக்காத்து வரும் கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மாவின் 63-வது பிறந்த நாள் : தமிழகம் முழுவதும் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு - திரளான கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்று மனமுருக பிரார்த்தனை

Aug 20 2017 11:26AM
எழுத்தின் அளவு: அ + அ -

மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவுடன் 33 ஆண்டுகளுக்‍கும் மேலாக உற்ற தோழியாகவும், சகோதரியாகவும் இணைபிரியாமல் உடன் இருந்து அம்மாவையும், கழகத்தையும் கட்டிக்காத்து வந்த தியாகத் தலைவி, கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மாவின் 63-வது பிறந்த நாளையொட்டி, தமிழகம் முழுவதும் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் அன்புக்‍கும், நம்பிக்‍கைக்‍கும் உரியவராக திகழ்ந்தவர் கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா. கழகம் பல நெருக்‍கடிகளை சந்தித்தபோது, மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவுக்‍கு உற்ற துணையாகவும், ஆலோசகராகவும் இருந்து கழகத்தைக்‍ காத்தவர் சின்னம்மா. மாண்புமிகு முதலமைச்சர் அம்மா, உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, இரவு பகல் பாராது, பசி நோக்‍காது, கண் துஞ்சாது, அவர் அருகிலேயே இருந்து, தாயைப் போன்று சேவையாற்றியவர் சின்னம்மா. ஓர் அன்னையைப் போன்று தம்மீது அன்புகாட்டி, தம்மை பேணிக்‍காத்த சின்னம்மாவை என்றுமே மறக்‍கமாட்டேன் என மாண்புமிகு முதலமைச்சர் அம்மா, மனதார புகழாரம் சூட்டியது நாடறிந்த உண்மையாகும். இந்நிலையில், கழகப் பொதுச் செயலாளரான சின்னம்மாவின் பிறந்த நாளான இன்று, அவர் நீடூழி வாழ்ந்து கழகத்திற்கும், நாட்டிற்கும் சேவையாற்ற வேண்டுமென தமிழகம் முழுவதும் உள்ள ஆலயங்களில் கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பல்வேறு மலர்களால் அம்மனுக்‍கும் சுவாமிக்‍கும் அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து விநாயகர் வழிபாடும் நடைபெற்றது. கழகத்தின் பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு, சின்னம்மா பூரண நலத்துடன் நீண்ட ஆயுளுடன் இருக்‍க வேண்டியும், அநீதிகளை தகர்த்தெறிந்து இரட்டை இலையை மீட்கவேண்டியும் மனமுருக பிரார்த்தனை செய்தனர்.

மதுரை மேலூர் தொகுதி அஇஅதிமுக அம்மா சார்பில், மதுரை மேலூர் சிவன் கோவிலில் பல்வேறு மலர்களால் சுவாமிக்‍கு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது. இதில், கழக அமைப்புச் செயலாளர் திரு. ஆர். சாமி, நகரச் செயலாளர் திரு. சரவணன் உட்பட ஏராளமான கழக நிர்வாகிகள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

உசிலம்பட்டி தொகுதி அஇஅதிமுக அம்மா சார்பில், உசிலம்பட்டி முருகன் கோவிலில் பல்வேறு மலர்களால் சுவாமிக்‍கு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது. இதில், ஏராளமான கழக நிர்வாகிகள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

திருவொற்றியூர் பகுதிக்‍ கழகம் சார்பில், திருவொற்றியூர் அருள்மிகு வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜ சுவாமிகள் திருக்‍கோவிலில், கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா நீடூழி வாழவேண்டி, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திரளான கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்‍களும் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் வீரராகவர் திருக்‍கோவிலிலும், மூலவருக்‍கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்‍களும் கலந்து கொண்டனர்.

கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா பிறந்த நாளையொட்டி, திருச்சி மாநகர் 12வது வட்டக்‍ கழகம் சார்பில், பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் சிங்கபெருமாள் கோயிலில், சிறப்பு பூஜைகளும், ஆராதனையும் நடைபெற்றது. இதில் கழக அமைப்புச் செயலாளர் திரு. ஆர். மனோகரன் மற்றும் திரளான கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்‍களும் கலந்து கொண்டனர்.

கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா நீடூழி வாழவேண்டி தூத்துக்குடி சிவன் கோவிலில் சிறப்பு பூஜைகளும், வழிபாடும் நடைபெற்றது. திரளானோர் இதில் கலந்து கொண்டனர்.

தஞ்சை தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் தஞ்சை ரயில்நிலையத்தில் உள்ள ஸ்ரீமத் சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் திரு. ரெங்கசாமி உட்பட கழக நிர்வாகிகளும், பொதுமக்‍களும் கலந்து கொண்டனர்.

தஞ்சை மேம்பாலம் அருகே உள்ள காது கேளாதோர், பார்வைத்திறன் குறைபாடுடையோர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. தஞ்சை தெற்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவ-மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மாவின் 63வது பிறந்தநாளையொட்டி, ஈரோடு மாவட்டம், செண்பகபுதூர் கரியகாளியம்மன் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அன்னதானம் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வெண்குன்றத்தில் உள்ள பள்ளியில் நடைபெற்ற விழாவில், 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், எழுது பொருட்கள் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை வீரமாகாளியம்மன் ஆலயத்தில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. திரளான கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்று, கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா நீடூழி வாழவேண்டுமென மனமுருக அம்மனை வழிபட்டனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரி அம்மன் கோயிலில், கழக வழக்கறிஞர் பிரிவு சார்பில், அம்மனுக்கு பட்டு சார்த்தி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

கோவை சாய்பாபா காலனியில் உள்ள சாய்பாபா கோயிலில், சிறப்பு ஆராதனை மற்றும் பஜனை நடைபெற்றது. அன்னதானமும் வழங்கப்பட்டது. கழக அமைப்புச் செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நெல்லை மாநகர் மாவட்டக்‍ கழகம் சார்பில், பாளையங்கோட்டையில் சிறப்பு வழிபாடும், மாணவ மாணவிகளுக்‍கு உணவும் வழங்கப்பட்டது. கழக மகளிர் அணி செயலாளர் விஜிலா சத்யானந்த் எம்.பி., கழக அமைப்பு செயலாளர் திரு,R.P. ஆதித்தன் மற்றும் திரளான கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00