சுதந்திரதினத்தையொட்டி கராத்தே கலையில் தேர்ச்சி பெற்ற 71 பள்ளி மாணவ-மாணவியர் 500 ஓடுகளை ஒரே நேரத்தில் உடைத்து சாதனை

Aug 15 2017 12:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

சுதந்திரதினத்தையொட்டி கராத்தே கலையில் தேர்ச்சி பெற்ற 71 பள்ளி மாணவ-மாணவியர் 500 ஓடுகளை ஒரே நேரத்தில் உடைத்து சாதனை படைத்தனர்.

இந்தியா முழுவதும் இன்று 71வது சுதந்திரதினம் உற்சாகத்துடன் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, திருச்சியில் பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்து கராத்தே கலையில் தேர்ச்சி பெற்ற 71 மாணவ-மாணவிகள் 500 ஓடுகளை ஒரே நேரத்தில் உடைத்து புதிய சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். மனதுக்கும் உடலுக்கும் வலிமையினை அளிக்கும் கராத்தே பயிற்சியின் மூலம் சாதனைகள் பல புரிய வேண்டும் என்ற நோக்‍கில் நிகழ்த்தப்பட்ட இந்த சாதனை நிகழ்வானது பதஞ்சலி புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறுகிறது. இந்த சாதனையை நிகழ்த்திய மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்‍கப்பட்டது. மாணவ-மாணவியரின் இந்த முயற்சியை ஏராளமான பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கண்டு பாராட்டி மகிழ்ந்தனர்.

கரூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான 21வது தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில் வயது அடிப்படையில் 500க்‍கும்​மேற்பட்ட பள்ளி-கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகளுக்‍கு சான்றிதழ்களும், பதக்‍கங்களும் வழங்கப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00