இலங்கை கடற்படை கைது செய்த நாகை மீனவர்கள் 8 பேர் உட்பட, அந்நாட்டு சிறைகளில் உள்ள 28 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் - பிரதமர் நரேந்திரமோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி கடிதம் - இலங்கையில் உள்ள 138 படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தல்

Jun 26 2017 10:21AM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகை மாவட்டம் அக்கறைப்பேட்டையில் இருந்து நேற்று மீன்பிடிக்கச் சென்ற 8 மீனவர்கள் உட்பட இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட 28 மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி, பிரதமர் திரு.நரேந்திரமோடிக்கு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். மேலும் இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 138 மீன்பிடி படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் திரு.நரேந்திரமோடிக்கு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி இன்று எழுதியுள்ள கடிதத்தில் நாகை மாவட்டம் அக்கறைப்பேட்டையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 8 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து காங்கேசன்துறைக்கு கொண்டு சென்றுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த 8 பேரையும் சேர்த்து, இலங்கையில் உள்ள 28 தமிழக மீனவர்களையும், 138 மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்குமாறு வெளியுறவு அமைச்சகத்திற்கு பிரதமர் உத்தரவிட வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

பாக் நீரிணையில் மீன்பிடித்து வரும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதற்கும், அவர்களை நீண்டகாலம் காவலில் வைப்பதற்கும் இலங்கை அதிகாரிகளுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் கடும் ஆட்சேபம் தெரிவிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் பிரதமரை கேட்டுக்கொண்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00