மணப்பாறை அருகே உற்சாகத்துடன் நடைபெற்ற ஜல்லிக்கட்டு - சீறிப்பாய்ந்த காளைகளை பாய்ந்து பிடித்து வீரத்தை வெளிப்படுத்திய இளைஞர்கள்

Apr 30 2017 5:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், சீறிப்பாய்ந்த நூற்றுக்கணக்கான காளைகளை, இளைஞர்கள் வீரத்துடன் பாய்ந்து பிடித்ததை ஏராளமானோர் ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர்.

மாண்புமிகு அம்மா வழியில் செயல்படும் தமிழக அரசு இயற்றிய வரலாற்று சிறப்புமிக்க சட்டம் காரணமாக, மாநிலம் முழுவதும் பாரம்பரிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஜல்லிக்கட்டு வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள தோப்புபட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி, இன்று உற்சாகத்துடன் நடைபெற்றது. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து 470 காளைகள் பங்கேற்றன. 350-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் களம் கண்டனர். வாடிவாசல் வழியாக, ஒன்றன் பின் ஒன்றாக காளைகள் சீறிப்பாய்ந்து வர, மாடுபிடி வீரர்கள், அதன் திமிலைப் பிடித்து வீரத்தை வெளிப்படுத்தினர். வெற்றிபெற்ற வீரர்களுக்கு விலைமதிப்பு மிக்க பரிசுகள் வழங்கப்பட்டன. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர். ஜல்லிக்கட்டை யொட்டி, 250-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00