தமிழகத்தில், 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் 2-ம் கட்ட போலியோ சொட்டுமருந்து முகாம் - மாநிலம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள் உட்பட 43 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்கள் மூலம் வழங்க ஏற்பாடு

Apr 30 2017 2:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெறுகிறது. சென்னை உட்பட மாநிலம் முழுவதும் 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

இந்தியாவில் போலியோ நோயை ஒழிப்பதற்காக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் 2 கட்டங்களாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில், முதல் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் கடந்த 2-ம் தேதி நடைபெற்றது. 5 வயதுக்கு உட்பட்ட 71 லட்சம் குழந்தைகளில், 66 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

இந்நிலையில், இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் உட்பட, மொத்தம் 43,051 மையங்களில், போலியோ சொட்டு மருந்து, இன்று காலை முதல் மாலை 5 மணி வரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் நங்கவல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.

திருவள்ளூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் இரண்டாவது கட்ட போலியோ சொட்டு மருந்து முகாமினை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் திருமதி சுந்தரவல்லி ஆகியோர் தொடங்கி வைத்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 5 வயதுக்கு உட்பட்ட 2 லட்சத்து 39 ஆயிரத்து 189 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

மதுரை மாவட்டத்தில் ஆயிரத்து 750 மையங்கள் மூலம் 3 லட்சத்து 14 ஆயிரத்து 802 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. செல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர், மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு சொட்டு மருந்து முகாமினை தொடங்கி வைத்தனர்.

திருவாரூர் மாவட்டத்தில், 2வது தவணையாக 1 லட்சத்து 22 ஆயிரத்து 180 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் அமைச்சர் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார்.

திருச்சி ஸ்ரீரங்கம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்தில், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அமைச்சர்கள் சொட்டு மருந்து வழங்கி, முகாமினை தொடங்கி வைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனையில் நடைபெற்ற முகாமினை, மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 5 வயதுக்கு உட்பட்ட ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 62 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. வில்லிசேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்தினை அமைச்சர் வழங்கினார்.

தருமபுரி மாவட்டத்தில் 984 மையங்கள் மூலம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாமினை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆயிரத்து 313 மையங்களில் 1 லட்சத்து 87 ஆயிரத்து 461 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இப்பணியில் 5 ஆயிரத்து 343 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 55 ஆயிரம் குழந்தைகளுக்கு ஆயிரத்து 236 மையங்கள் மூலம் சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. நாகர்கோவிலில் உள்ள கிருஷ்ணன்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முகாமினை நாடாளுமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்.

வேலூர் மாவட்டத்தில் 2,375 முகாம்கள் மூலம் 3 லட்சத்து 79 ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. சத்துவாச்சாரி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் முகாமினை, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் தொடங்கிவைத்தார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள போலியோ சொட்டு மருந்து முகாமினை சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்.

கரூர் மாவட்டத்தில் 86,200 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. கரூர் நகராட்சி, கஸ்தூரிபாகாந்தி தாய்-சேய் நல விடுதி உட்பட பல்வேறு இடங்களில் சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

கும்பகோணம் அருகே கபிஸ்தலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமினை அமைச்சர் தொடங்கி வைத்தார். பேருந்து, ரயில் நிலையம் உட்பட 5,510 மையங்களில் சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் 5 வயதுக்கு உட்பட்ட 3 லட்சத்து 80 ஆயிரத்து 220 குழந்தைகளுக்கு இரண்டாவது கட்ட போலியோ சொட்டு மருந்து இன்று வழங்கப்படுகிறது. கண்டமானடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முகாமினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 லட்சத்து 29 ஆயிரத்து 695 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கும் வகையில், ஆயிரத்து 903 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீபெரும்புதூர் சங்கச்சாவடி அருகில் முகாம் அமைக்கப்பட்டு, சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தில் 2-ம் கட்டமாக 2 லட்சத்து 83 ஆயிரத்து 541 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதற்காக ஆயிரத்து 708 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆயிரத்து 971 மையங்கள் அமைக்கப்பட்டு, 2 லட்சத்து 41 ஆயிரத்து 229 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. ஆரணி அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமினை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

இதேபோல், கலசப்பாக்கம் வட்டம், மேல்வில்வராயநல்லூர் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், போலியோ சொட்டு மருந்து முகாமினை சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்.

புதுச்சேரியில் இரண்டாவது கட்டமாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. 448 மையங்கள் மூலம் 91,500 குழந்தைகளுக்கு இன்று சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00