நீலகிரியில் நெலாக்கோட்டை வனப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை புலி தூக்கிச் சென்றது

Mar 26 2017 4:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

நீலகிரி மாவட்டம் நெலாக்கோட்டை வனப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை புலி தூக்கிச் சென்றது.

நெலாக்கோட்டை பகுதியில் காட்டுக்குள் இருந்து வெளியேறிய ஒரு புலி, அங்கு மேயும் ஆடு, மாடுகளை அடித்துக் கொன்றதால், அதனை பிடிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக, புலியின் நடமாட்டம் உள்ள பகுதியில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இன்று காலை வனத்துறையினர் ஒரு கேமராவை சோதனை செய்து பார்த்தபோது, அதில் புலியின் உருவம் பதிவாகியிருந்தது. எனினும், மற்றொரு கேமராவை புலி கடித்து இழுத்துச் சென்றது. பின்னர் அந்த கேமராவை புலி அங்கேயே விட்டுச் சென்றதால், அதையும், வனத்துறையினர் பரிசோதித்தனர். ஆனால், அந்த கேமராவில் புலியின் உருவம் சரியாக பதிவாகவில்லை. மற்றொரு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், அப்புலி முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள 78-ம் எண் கொண்ட புலிதான் என்பது தெரியவந்தது. இதன்மூலம் நெலாக்கோட்டை பகுதிக்குள் புகுந்து கால்நடைகளை அடித்துக் கொன்றதும் அந்த புலிதான் என்பது உறுதி செய்யப்பட்டது. அதற்கு 6 வயது முதல் 7 வயது இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00