பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 8 காவலர்கள் உள்ளிட்ட 21 பேரின் மறைவுக்கு, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் - அனுதாபம் : உயிரிழந்த 21 பேரின் குடும்பங்களுக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் வீதம் மொத்தம் ரூ.63 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவு

Mar 26 2017 4:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 8 காவலர்கள் உள்ளிட்ட 21 பேரின் மறைவுக்கு, முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டுள்ளார். உயிரிழந்த 21 பேரின் குடும்பங்களுக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 63 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி மாவட்டம், உதகை நகர் மேற்கு காவல் நிலைய தலைமைக் காவலர் திரு ஜோ. மூர்த்தி -

ஈரோடு மாவட்டம், ஈரோடு ஆயுதப்படை பிரிவு, இரண்டாம் நிலை பெண் காவலர் திருமதி V. சரஸ்வதி மற்றும் கடத்தூர் காவல் நிலைய இரண்டாம் நிலை காவலர் திரு. நா. சிவக்குமார் -

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஊரக காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு A. பிரபாகரன், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் தீயணைப்பு மீட்புப் பணி நிலைய தீயணைப்பாளர் திரு அ. மாணிக்கராஜா -

கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜா கடை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு A.K. சேகர், நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை போக்குவரத்து காவல் பிரிவு தலைமைக் காவலர் திரு K. திருநாவுக்கரசு -

தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் காவல் நிலைய தலைமைக் காவலர் திரு M. சக்திவேல் ஆகிய காவல் துறை அலுவலர்கள் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும்; விழுப்புரம் மாவட்டம், வி. சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. முருகன் மற்றும் கொங்கராம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வி சுவீதா, பெரமண்டூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. சுப்பிரமணி -

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் கிராமத்தைச் சேர்ந்த திரு. முருகன், புளியரை கிராமத்தைச் சேர்ந்த திரு. பாலசுந்தர் -

மதுரை மாவட்டம், அல்லிகுண்டம் கிராமத்தைச் சேர்ந்த திரு கூழ்சாமி மற்றும் சோழவந்தான் கிராமத்தைச் சேர்ந்த திரு. துரைப்பாண்டி, வேலூர் மாவட்டம், அன்வர்த்திகான் பேட்டையைச் சேர்ந்த திரு. ஜார்ஜ் -

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டத்தைச் சேர்ந்த திரு சக்திவேல், தேனி மாவட்டம், மேல்மங்கலம் பிட் 1, நெசவாளர் காலனியைச் சேர்ந்த திரு சே. ரெங்கராஜ் -

கோயம்புத்தூர் மாவட்டம், மலுமிச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு ஏழுமலை, வி.ஹெச். ரோடு, சி.எம்.சி காலனியைச் சேர்ந்த திரு. நாகேந்திரன் -

சேலம் மாவட்டம், பெரிய மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த திரு. பெரியசாமி ஆகியோர், மின்சாரம் தாக்கியும் உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து மிகவும் துயரம் அடைந்ததாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 21 நபர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00