நாகர்கோவில் அருகே விபத்தில் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி

Mar 26 2017 12:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகர்கோவில் அருகே விபத்தில் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே நடைபெற்ற சாலை விபத்தில், கல்லூரி மாணவிகள் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மாணவிகள் பலர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, விபத்தில் பலியான மாணவிகளின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் திரு. விஜயகுமார், மாவட்ட ஆட்சியர் திரு. சஜ்ஜன் சிங் சவான் ஆகியோர், உயிரிழந்த மாணவிகளின் வீடுகளுக்கு சென்று, தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினர். அதனைதொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியையும் வழங்கினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00