புரட்சித் தலைவி அம்மாவை கொலைக்குற்றவாளி என அவதூறு பழிபோட்ட மு.க. ஸ்டாலினுக்கு அ.இ.அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கடும் கண்டனம் : அப்பட்டமான அவதூறினை திரும்பப் பெற்று பண்பாடற்ற செயலுக்காக பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்தல்

Feb 25 2017 8:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

புரட்சித் தலைவி அம்மாவை கொலைக்குற்றவாளி என்கிற அடுக்காத அவதூறு பழிபோட்ட மு.க. ஸ்டாலின், தான் பயன்படுத்திய அப்பட்டமான அவதூறினை திரும்பப் பெற்று தனது பண்பாடற்ற செயலுக்காக பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும என அ.இ.அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் திரு. டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டி.டி.வி. தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க.வின் செயல் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் நேற்று பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, கொலை குற்றவாளியான ஜெயலலிதா'' என்ற வார்த்தையை உபயோகப்படுத்தி இருக்கிறார் - அதுவும், உலகெங்கும் வாழும் தமிழ் மக்களால் `அம்மா' எனும் மூன்றெழுத்து மந்திரத்தால் ஆராதிக்கப்படும் ஓர் கனிவுளத்தின் இலக்கணத்தை, கருணையே வடிவான இருப்பிடத்தை, அதுவும் அவர் பிறந்த நாளில், அவர் மறைந்ததற்கு பிறகு வரும் முதல் பிறந்த நாளில் கோடானு கோடி தொண்டர்கள் மிகுந்த நெகிழ்வோடும், வேதனையோடும் ஆழ்ந்திருக்கும் வேளையில் இது போன்றறொரு அவதூறை, கடுகளவும் உண்மையற்ற பழிச்சொல்லை திரு. மு.க. ஸ்டாலின் பயன்படுத்தி விமர்சித்திருப்பது அவரது பண்பாடற்ற தன்மையையே காட்டுகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.

உலகத்து உயிரினங்களை எல்லாம் உளமாற நேசிப்பவரும், அரசு தொட்டில் கட்டி, அன்னமிட்டு பசி போக்கும் அருங்குணத்தால் உலகமே போற்றிடும், ஈகைக்கு இந்த நூற்றாண்டுச் சான்றாக வாழ்ந்து உலகத் தமிழர்களின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் நீக்கமற நிலையாசனமிட்டு வீற்றிருக்கும் ஒரு நிகரில்லா தலைவியை,`பகைவருக்கும் அருள்வாய் நன்நெஞ்சே' என்னும் பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாக தன் மீது லாரி ஏற்றி கொலை செய்யவே முயற்சித்தவர்களின் வாரிசுக்கே கஷ்டம் என்று சொன்னதுமே 5 லட்சம் ரூபாயை அள்ளிக் கொடுத்த வள்ளல் மனத்தை, வாஞ்சை குணத்தை உண்மைக்கு மாறான கடுஞ்சொற்களால் மு.க. ஸ்டாலின் விமர்சித்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது என கழகத் துணைப்பொதுச்செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

கரை நிறைந்து ஓடிவரும் காவேரியும், 5 மாவட்ட உழவினத்தின் அல்லல் தீர்க்கும் முல்லைப்பெரியாறும், ஏழை, எளிய தொழிலாளர்களின் உடைமைகளாகிய என்.எல்.சி. பங்குகளும் என எண்ணில்லா உரிமை மீட்பு வெற்றிகளும்; விலையில்லா அரிசியால் பசி தீரும் மக்களும், வீடுதோறும் மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி இவற்றால் பயன்பெறும் மக்களும், மடிக்கணினி, மிதிவண்டி, தாலிக்கு தங்கம், பசுமை வீடுகள் என்றெல்லாம் பார் வியக்கும் திட்டங்களால் அன்றாடம் பயனடையும் கோடானு கோடி மக்களின் இதயங்களில் மனித தெய்வமாகவே வாழுகின்ற எங்கள் அம்மாவின் நினைவலைகளை, திட்டங்களுக்கு பெயர் சூட்டி தான் நிலைநிறுத்த வேண்டும் என்ற அவசியமோ, கட்டாயமோ இல்லை என்பதை உலகம் அறியும் என்று திரு. டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

உள்ளத்தில் நஞ்சும், உதட்டில் வெல்லமுமென அனைத்து தீய குணங்களையும் தன்னகத்தே கொண்டு என்னதான் பொது வாழ்க்கையில் திரு. மு.க. ஸ்டாலின் புனிதர் வேடம் போட்டாலும், அவர் நெஞ்சத்தில் நிறைந்திருக்கும் வன்மமும், வன்முறையும் அவர் பயன்படுத்திய வார்த்தைகளால் பீறிட்டு வந்திருக்கிறது - இதன் மூலம் நடைபயிற்சியைக் கூட கொலை பயிற்சியாக்கியும், நட்புக்கும் நஞ்சையே பரிசளிக்கும் இந்த நயவஞ்சகர்களின் உண்மை வேஷம் அவர்கள் உதித்த சொற்களாலே உணர்த்தப்பட்டிருக்கிறது - புரட்சித் தலைவி அம்மாவை கொலைக் குற்றவாளி என்கிற அடுக்காத அவதூறு பழிபோட்ட திரு. மு.க. ஸ்டாலின், தான் பயன்படுத்திய அப்பட்டமான அவதூறினை திரும்பப் பெற்று, தனது பண்பாடற்ற செயலுக்காக பகிரங்க மன்னிப்புகேட்க வேண்டும் என கழகத் துணைப் பொதுச்செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமியை, வாழப்பாடி பழனிச்சாமி என்றும், காவேரி மேலாண்மை வாரியத்தை காவேரி நடுவர் மன்றம் என்றும், அவ்வப்போது பொது இடங்களில் கோமாளித்தனங்கள் புரியும் திரு. மு.க. ஸ்டாலின் இனியும் துண்டுச் சீட்டு துணையின்றி பேசுவதை நிறுத்திக்கொள்வதே உத்தமம் என்றும் இவ்வேளையில் கேட்டுக் கொள்வதாக கழகத் துணைப் பொதுச்செயலாளர் திரு. டி.டி.வி. தினகரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00