புரட்சித் தலைவி மாண்புமிகு அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் கழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சிகள் : மாண்புமிகு அம்மாவின் நினைவுகள் மற்றும் சாதனைகளை எடுத்துரைக்கும் காட்சிகள் L.E.D. திரையில் ஒளிபரப்பு

Feb 25 2017 11:53AM
எழுத்தின் அளவு: அ + அ -

புரட்சித் தலைவி மாண்புமிகு அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் கழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சிகள் நடைபெற்று வருகின்றன. இதில், மாண்புமிகு அம்மாவின் நினைவுகள் மற்றும் சாதனைகளை எடுத்துரைக்கும் காட்சிகள், அதிநவீன L.E.D. திரையில் ஒளிபரப்பப்படுவது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், நேருஜி நினைவு நகரவை மேல்நிலைப் பள்ளியில், கழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை அமைச்சர் திரு. திண்டுக்கல் சி. சீனிவாசன் தொடங்கி வைத்தார். இதில், மாண்புமிகு அம்மா செயல்படுத்திய சாதனை திட்டங்களை எடுத்துரைக்கும் புகைப்படங்கள் மற்றும் ஒளிப்படக் காட்சிகளை ஏராளமானோர் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

மதுரை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், மாட்டுத்தாவணி பகுதியில் தமிழக அரசின் சாதனை புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இதனை அமைச்சர் திரு. செல்லூர் கே. ராஜு தொடங்கி வைத்தார். L.E.D. வாகனம் மூலம் ஒளிபரப்பப்பட்ட மாண்புமிகு அம்மாவின் நினைவுகளை எடுத்துரைக்கும் வீடியோ காட்சிகள் பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்தன.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே கழக அரசின் சாதனைகளை விளக்கும் 2 நாள் புகைப்பட கண்காட்சியினை அமைச்சர்கள் திரு. P. தங்கமணி, டாக்டர் வி. சரோஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இக்கண்காட்சியில், மாண்புமிகு அம்மாவின் சாதனைத் திட்டங்கள், அரசு திட்ட விழாக்கள், வளர்ச்சிப் பணிகளை விளக்கிடும் நூற்றுக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியினை அமைச்சர் திரு. இரா. துரைக்கண்ணு தொடங்கி வைத்து பார்வையிட்டார். இக்கண்காட்சியில் இடம்பெற்றிருந்த மாண்புமிகு அம்மா செயல்படுத்திய திட்டங்களை விளக்கும் புகைப்படங்களை, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், கழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை அமைச்சர் திரு. கடம்பூர் ராஜு தொடங்கி வைத்தார். இதில், மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் சாதனைத் திட்டங்கள் விளக்கும் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மாண்புமிகு அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு, நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் கழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதனை அமைச்சர் திருமதி வி.எம். ராஜலெட்சுமி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

வேலூர் மாவட்டம், ஆம்பூர் நகராட்சி பேருந்து நிலையம் அருகே கழக அரசின் புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சியில், மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் சாதனைத் திட்டங்களை எடுத்துரைக்கும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இதனை ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர்.

மாண்புமிகு அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு, விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ள அரசின் சாதனைகள் அடங்கிய புகைப்படங்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00