பன்னீர்செல்வத்தின் சதியை முறியடித்த அமைச்சர்கள் கழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, தொகுதிகளில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு - மாண்புமிகு அம்மா ஆசியுடன் சின்னம்மா வழியில் செயல்படும் தமிழக அரசுக்கு என்றென்றும் துணைநிற்போம் என மக்கள் உறுதி

Feb 25 2017 9:47AM
எழுத்தின் அளவு: அ + அ -

அ.இ.அ.தி.மு.க.வுக்கு துரோகம் இழைத்த பன்னீர்செல்வம் மற்றும் தி.மு.க.வினரின் சதிச்செயலை முறியடித்து, மாண்புமிகு அம்மாவின் ஆட்சியை நிலைநிறுத்திய அமைச்சர்கள் மற்றும் கழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, அவர்களது தொகுதிகளில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா ஆசியுடன் பொறுப்பேற்றுள்ள அரசுக்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து தொகுதிகளுக்கு வருகை தரும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். அந்த வகையில், பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான திரு. துரைக்கண்ணு மற்றும் தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் திரு. ரெங்கசாமி ஆகியோருக்கு வாண வேடிக்கைகள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, பொதுமக்கள் மற்றும் கழகத்தினர் அவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். அதனைதொடர்ந்து, பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர், பாபநாசம் பேருந்து நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதேபோல், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான திரு, கடம்பூர் ராஜூ, தனது தொகுதிக்கு வருகை தந்தார். அப்போது, பொதுமக்கள், கழக நிர்வாகிகள் ஏராளமானோர் அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட அமைச்சர், திரு. கடம்பூர் ராஜூ, அந்த மனுக்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான டாக்டர் நிலோபர் கபில் வாணியம்பாடிக்கு வருகை தந்தார். அப்போது பொதுமக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். மறைந்த மாண்புமிகு அம்மாவின் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00