மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் 69-வது பிறந்தநாள் விழா - தமிழகம் முழுவதும் 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதை குறிக்கும் வகையில், சென்னையில் மரக்கன்று நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

Feb 24 2017 12:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

மாண்புமிகு அம்மாவின் 69-வது பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தையும், வர்தா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை பசுமையாக்கும் திட்டத்தையும் முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் வனம் மற்றும் மரங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, தமிழகத்தின் பசுமைப் போர்வையை மேம்படுத்தும் உன்னத நோக்கத்தில் வனப்பகுதி மட்டுமின்றி, வனத்திற்கு வெளியே இருக்கும் காலி இடங்களிலும் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் மாபெரும் மரம் நடும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மாண்புமிகு அம்மாவின் பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் கடந்த 2012-ம் ஆண்டு 64 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அம்மாவின் பிறந்த நாளையொட்டி, மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அம்மாவின் 69-வது பிறந்த நாளையொட்டி இந்த ஆண்டு 65 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழகம் முழுவதும் 69 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.

மரங்கள் நடுவது மற்றும் பசுமை பரப்பை அதிகரிப்பது போன்றவை மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் உள்ளம் கவர்ந்த பணி என்பதால், அவரது பிறந்த நாளான இன்று இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் மகிழம் பூ மரக்கன்றினை நட்டு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

வர்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பசுமையாக்குதல் திட்டத்தையும் தொடங்கி வைப்பதன் அடையாளமாக முதலமைச்சர் இந்த மரக்கன்றை நட்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00