சென்னை அருகே எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 30 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 15 கோடி ரூபாய் நிவாரண உதவியை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவிப்பு

Feb 24 2017 12:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை அருகே எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 30 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 15 கோடி ரூபாய் நிவாரண உதவியை முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவித்துள்ளார். மேலும், 75 லட்சம் ரூபாய் செலவில் எர்ணாவூர் மற்றும் நொச்சிக்குப்பத்தில் மீன்சந்தைகள் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

எண்ணூர் அருகே கடந்த 28-ம் தேதி 2 கப்பல்கள் மோதிக் கொண்டதில், எண்ணெய் கசிந்து கடலில் பரவியது. எண்ணெய்ப் படலத்தை 5 ஆயிரத்து 700 பேர் போர்க்கால அடிப்படையில் அகற்றினர். இதனைத்தொடர்ந்து, திருவள்ளூர், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் கடந்த 28-ம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்லாததால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையில், தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த 3 மாவட்டங்களை சேர்ந்த பாதிக்கப்பட்ட 30 ஆயிரம் மீனவக் குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் இடைக்கால நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டார். மொத்தம் 15 கோடி ரூபாய்க்கான இடைக்கால நிவாரணத் தொகை முழுவதையும் தமிழக அரசு ஏற்கும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார். எர்ணாவூர் மற்றும் நொச்சிக்குப்பத்தில் 2 மீன் சந்தைகள் அமைப்பதற்கு தமிழக அரசு மூலம் செலவு மேற்கொள்ளப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார். இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் திரு. திண்டுக்கல் சி. சீனிவாசன், திரு. கே.ஏ.செங்கோட்டையன், திரு. பி. தங்கமணி, திரு. எஸ்.பி. வேலுமணி, திரு. டி. ஜெயகுமார், திரு.கே.பி. அன்பழகன், திரு.கே.சி. கருப்பணன், திரு. ஆர்.துரைக்கண்ணு, திரு. ஆர்.பி. உதயகுமார், திரு. சேவூர் ராமசந்திரன் மற்றும் அரசு தலைமைச் செயலாளர் திருமதி கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00