தமிழ் மக்களின் நீண்டகால பாரம்பரிய ஜல்லிக்கட்டு நடத்த உடனடியாக அவசர சட்டம் பிறப்பிக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவ-மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டம்

Jan 20 2017 5:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜல்லிக்கட்டு விவகாரத்தில், உடனடியாக அவசரச் சட்டம் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்தி,தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாணவ - மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள், வணிகர்கள் உட்பட தமிழகத்தின் ஒட்டு மொத்த மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். "பீட்டா" அமைப்பை தடை செய்யவும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி, சென்னை மெரினாவில் 4-வது நாளாக இன்றும் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழக்கமிட்டு அறவழியில் மாணவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தியும், பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரியும், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், தமுக்கம் மைதானம், உசிலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 4-வது நாளாக பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், பொதுமக்கள், குழந்தைகள், வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் சுமார் ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படவில்லை. ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு உடனடி ஆதரவு அளிக்க போராட்டக்காரர்கள்வலியுறுத்தினர்.

திருச்சியில் திரையரங்குகள், தனியார் பள்ளிகள், தொழிற்சங்கங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. சின்னகடைவீதி, பெரியகடைவீதி, காந்தி மார்க்கெட் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பீட்டா அமைப்பை தடை செய்ய கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் வலியுறுத்தினர்.

தமிழர்களின் கலாச்சாரத்தைப் போற்றும் ஜல்லிக்கட்டுப் போட்டியினை நடத்தக்கூடாது என்ற பீட்டா அமைப்பினைக் கண்டித்தும், ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் இயற்ற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தக் கோரியும், காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்க வலியுறுத்தியும் விழுப்புரம் மாவட்டத்தில் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன.

ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் ஆத்தூரில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. கெங்கவல்லி, தம்மம்பட்டி, தலைவாசல், வீரகனூர், பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வணிகர்கள் தாமாகவே முன்வந்து கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை மத்திய அரசு உடனடியாக நீக்க அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் தொடர்ந்து 4-வது நாளாக அறவழிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோல், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக லாரி உரிமையாளர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வர கோரி, திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர், முத்துப்பேட்டை, வலங்கைமான், நன்னிலம், பேரளம், குடவாசல் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து கடைகளை அடைத்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தியும், பீட்டா அமைப்பிற்கு தடை விதிக்க வேண்டியும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் கடையடைப்பில் ஈடுபட்டன.

கரூர் ஜவஹர் பஜார், கோவை சாலை, வெங்கமேடு, லைட் ஹவுஸ் கார்னர், காமராஜ் மார்க்கெட் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதேபோல், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை, தோகைமலை, பள்ளப்பட்டி உட்பட மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மாணவ - மாணவிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லை பாளையங்கோட்டை, வ.உ.சி. மைதானத்தில் மாணவ - மாணவிகள் 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்திற்கு ஆதரவாக விவசாயிகளும் பங்கேற்றுள்ளனர். ஜல்லிக்கட்டு உடனடியாக நடத்தப்பட வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

ஜல்லிக்கட்டுக்கான தடையை உடனடியாக நீக்க வலியுறுத்தி, புதுக்கோட்டை, அரந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் வணிகர்கள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ரயில் அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

திருப்பூரில் பின்னலாடை தொழில்துறையினர் மற்றும் தொழிற்சங்கத்தினர் ஒன்றினைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

காளைகளை காட்சிப்பட்டியலிலிருந்து நீக்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் முழு கடையடைப்புப் போராட்டம் நடைபெற்று வரகிறது. தனியார் மினி பேருந்துகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தி கும்பகோணத்தில் மாணவர்கள், பல்வேறு அமைப்புகள் நடத்தி வரும் அமைதிப் போராட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். வர்த்தக நிறுவனங்களும் கடைகளை அடைத்து ஆதரவு தெரிவித்துள்ளன.

ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் முகநூல் நண்பர்கள் இணைந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மாணவர்களுக்கு ஆதரவாக வணிகர்கள், ஆட்டோக்கள் என அனைத்துத் தரப்பினரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பீட்டா அமைப்பை இந்தியாவிலிருந்து வெளியேற்ற வலியுறுத்தினர்.

ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தருமபுரியில் மாணவர்கள், வணிகர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆட்டோ மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வணிகர்கள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்திற்கு பொதுமக்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி, திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அறப்போராட்டங்கள் நடைபெற்றன. திருத்தணி, திருவேற்காடு, பூந்தமல்லி, பொன்னேரி, திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் மாணவர்கள், பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், ஆசிரியர்கள், மகளிர் அமைப்பினர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்று தொடர் போராட்டத்தில் பங்கேற்றனர். மத்திய அரசுக்கு எதிராக கண்டன குரல்கள் எழுப்பினர்.

ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசரச்சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரியில் போராட்டக்காரர்கள் மற்றும் தமிழ் அமைப்புகள் 12 மணி நேர பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆட்டோ, டெம்போக்கள் இயக்கப்படாததுடன், அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.



"பீட்டா"வுக்கு எதிர்ப்பு

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்படும் பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க வலியுறுத்தி, மாணவ - மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் என ஒட்டுமொத்த தமிழக மக்களும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். "பீட்டா" அமைப்பை இந்தியாவிலிருந்து வெளியேற்றவும் அவர்கள் ஆவேசத்துடன் முழக்கமிட்டனர்.



பல்வேறு மாநிலங்களில் ஆதரவு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடி வரும் தமிழக இளைஞர்களுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்புக்கு எதிராகவும், தலைநகர் டெல்லியில் இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு தமிழகத்தைத் தொடர்ந்து வெளி மாநிலங்களிலும் ஆதரவு பெருகி வருகிறது. டெல்லியில் ஜன்தர்மந்தர் பகுதியில் கூடிய ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள், நாட்டு மாடுகளை பாதுகாக்க வேண்டியும், பாரம்பரியமாக பாதுகாக்கப்பட்டு வரும் விலங்குகளை அழிக்க நினைக்கும் வெளிநாடுகளைச் சேர்ந்த அமைப்புகளுக்கு எதிராக முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். பீட்டா அமைப்புக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக இளைஞர்களின் போராட்டத்திற்கு வலிமை சேர்க்கும் விதமாக பல்வேறு மாநிலங்களில் ஆதரவுக்குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளதால் நாடு முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு பெருகி வருகிறது.



நடிகர் சங்க நிர்வாகிகள் மவுனப் போராட்டம்

ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் நடிகர் சங்க நிர்வாகிகள் மவுனப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பொன்வண்ணன், பொருளாளர் கார்த்தி, நடிகர்கள் சத்யராஜ், ரகுமான், உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும் திரை உலக நட்சத்திரங்களும் கலந்து கொண்டுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00